திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில்

திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. நந்தனார் வணங்குவதற்காக இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 20வது தலம் ஆகும்.

தேவாரம் பாடல் பெற்ற
திருப்புன்கூர் சிவலோகநாதர் கோவில்
பெயர்
புராண பெயர்(கள்):புங்கு + ஊர் = புங்கூர் - புன்கூர்
பெயர்:திருப்புன்கூர் சிவலோகநாதர் கோவில்
அமைவிடம்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவலோகமுடைய நாயனார், சிவலோகநாதர்.
தாயார்:சொக்கநாயகி, சௌந்தர நாயகி.
தல விருட்சம்:புங்க மரம்.
தீர்த்தம்:கணபதி தீர்த்தம் (நந்தனார் வெட்டியது).
ஆகமம்:சிவாகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், அப்பர், சுந்தரர்

அமைவிடம்

வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் 3 கி.மீ. சென்றால் ஒருபுறம் திப்புன்கூர் கைகாட்டியும், மறுபுறம் திருப்புன்கூர் சிவலோக நாதசுவாமி கோயில் என்ற வளைவு உள்ளது; அதனுள் - அச்சாலையில் 1 கி. மீ. சென்றால் கோயிலை அடையலாம். கோயில் வரை வாகனம் செல்லும்.

திருத்தலப் பாடல்கள்

  • இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருஞான சம்பந்தர் பாடிய பதிகம்

முந்தி நின்ற வினைக ளவைபோகச் சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்தம் இல்லா அடிக ளவர்போலுங் கந்த மல்கு கமழ்புன் சடையாரே.
மூவ ராய முதல்வர் முறையாலே தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்
ஆவ ரென்னும் அடிக ளவர்போலும் ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே.

திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப் பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்
துறவாதே கட்டறுத்த சோதி யானைத் தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் றன்னைத்
திறமாய எத்திசையுந் தானே யாகித் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிறமா மொளியானை நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே..

சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய பதிகம்

அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்தன் ஆருயி ரதனை வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீஎனை நமன்றமர் நலியில் இவன்மற் றென்னடி யானென விலக்கும்
சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன் செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே..

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புக்கள்

படத்தொகுப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.