திராவிடக் கட்டிடக்கலை ஒழுங்கு

கட்டிடக்கலை ஒழுங்கு (Architectural Order) என்பது கட்டிடமொன்றில் அதன் உறுப்புக்களின் முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கமைவு ஆகும். திராவிடக் கட்டிடக்கலை ஒழுங்கு என்னும்போது திராவிடக் கட்டிடக்கலையில் காணப்படுகின்ற இவ்வாறான ஒழுங்கமைவைக் குறிக்கும். இக்கட்டிடக்கலை ஒழுங்கானது பண்டைக்கால இந்தியாவின் ஆகமங்கள் மற்றும் சிற்பநூல்களில் அடங்கியுள்ள கட்டிடக்கலை, சிற்பம் ஆகியவை தொடர்பான விதிகளுக்கு அமையவும், பிரதேச மற்றும் சமுதாய, அரசியல், பண்பாட்டு நிலைமைகளை ஒட்டியும் வளர்ந்து வந்ததாகும்.

திராவிடக் கட்டிடக்கலை பெரும்பாலும் சமயம் சார்ந்ததாகவே இருந்து வந்துள்ளது. இதனால் கோயில் கட்டிடங்களை ஆராய்வதன் மூலம் இக் கட்டிடக்கலை ஒழுங்கு பற்றி அறிந்து கொள்ள முடியும்.

அடிப்படை உறுப்புகள்

திராவிடக் கட்டிடக்கலை உறுப்புக்கள்

ஒற்றைக் கருவறையுடன் கூடிய எளிமையான கோயில் கட்டிடமொன்று திராவிடக் கட்டிடக்கலையின் அடிப்படையான உறுப்புக்களான (அங்கங்கள்) பின்வரும் அனைத்தையும் கொண்டிருக்கக்கூடும்.

மேலே தரப்பட்ட ஒவ்வொரு உறுப்பும் பல துணை உறுப்புக்களால் ஆனது. துணை உறுப்புக்கள் வெவ்வேறான எண்ணிக்கைகளிலும், விதங்களிலும் சேர்வதன் மூலம் பலவகையான அடிப்படை உறுப்புகள் உருவாகின்றன. புழக்கத்திலுள்ள பல்வேறு சிற்பநூல்களும் ஆகமங்களும் இவ்வாறான வேறுபாடுகள் குறித்து விளக்குகின்றன.

உபபீடம்

திராவிடக் கட்டிடங்களில் நிலத்துக்கு மேல் அமைகின்ற முதல் உறுப்பு இது. ஆரம்பகாலக் கட்டிடங்களில் உபபீடம் காணப்படவில்லை. கட்டிடங்களின் அளவு பெரிதாகி அவற்றின் சிக்கல் தன்மையும் அதிகரித்தபோது இந்த உறுப்புச் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மேல் அமைக்கப்படவுள்ள தாங்குதளத்துக்கு வலுவூட்டவும், கட்டிடத்தை உயர்த்திக் காட்டுவதற்குமாகவே உபபீடங்கள் அமைக்கப்படுகின்றன என்று சிற்பநூல்கள் கூறுகின்றன.

மயமதம், வேதி பத்ரம், பிரதி பத்ரம், சுப பத்ரம் என மூன்று வகையான உபபீடங்கள் பற்றியும், காசியப சிற்பசாஸ்திரம் என்னும் சிற்பநூல், பிரதி பத்ரம், பிரதி சுந்தரம், சௌபத்ரம், கல்யாணிகா என்னும் நான்கு வகையான உபபீடங்கள் பற்றியும் விளக்குகின்றன.

தாங்குதளம்

சிற்பநூல்களின்படி கட்டிடங்களின் அடித்தளம் இத் தாங்குதளங்களே. வடமொழியில் இதனை அதிஷ்டானம் என்பர். எதன்மீது கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றனவோ அதுவே அதிஷ்டானம் என மயமதம் கூறுகிறது. தாங்குதளங்கள், பாதபந்தம், பிரதிபந்தம், பத்மபந்தம் என மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை மேலும் பல துணைப்பிரிவுகளாக வகுக்கப்படுகின்றன. மயமதம் 14 வகையான தாங்குதளங்கள் பற்றியும், காசியப சிற்பசாஸ்திரம் 22 வகையான தாங்கு தளங்கள் பற்றியும் விபரங்கள் தருகின்றன.

பாதசுவர்

தளவரிசை

கழுத்து

சிகரம்

முடி

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.