தலிகோட்டா சண்டை

தலிகோட்டா சண்டை அல்லது தலைக்கோட்டை சண்டை அல்லது தலைக்கோட்டை போர் (Battle of Talikota, கன்னடம்: ತಾಳಿಕೋಟೆ, தெலுங்கு: ತಾಳಿకోట, சனவரி 26, 1565), விசயநகரப் பேரரசிற்கும் தக்காண சுல்தான்களுக்கும் இடையே நடந்த இறுதிகட்டப் போராகும். இதன் விளைவாக தென்னிந்தியாவின் கடைசி பெரும் இந்து இராச்சியம் முடிவிற்கு வந்தது. தலிகோட்டா கர்நாடகாவின் பீஜப்பூரின் தென்கிழக்கே ஏறத்தாழ 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. விசயநகரத்தின் தலைமை அச்சுத ராயரிடம் இருந்து ராமராயருக்கு மாறிய போது சுல்தானகங்கள் ஒன்றிணைந்து விசயநகரத்தை வெல்ல நினைத்தனர். மேலும் சுல்தானகங்களுக்குள் நடந்த திருமணங்கள் அவர்களது உட்பூசல்களைத் தீர்த்தது. எனவே அவர்கள் ஒன்றிணைந்து தங்கள் பொது எதிரியான விசயநகரப் பேரரசை வென்றனர்.

தலிகோட்டா சண்டை
இசுலாமியர்களின் இந்தியப் படையெடுப்பின் பகுதி
நாள் சனவரி 26, 1565
இடம் தற்கால கர்நாடகத்தைச் சேர்ந்த தலிகோட்டா
16°28′23.9″N 76°18′42.6″E
அறுதி தக்காண வெற்றி
பிரிவினர்
விசயநகரப் பேரரசு தக்காண சுல்தான்கள்
தளபதிகள், தலைவர்கள்
அலியா ராமராயர்  அலி அதில் ஷா I
இப்ராகிம் குலி குதுப் ஷா வாலி
உசைன் நிசாம் ஷா I
அலி பரீத்
, மகாராட்டிரத் தலைவர் ராஜா கோர்பாடே
பலம்
140,000 காலாட்கள், 10,000 குதிரைகள் மற்றும் 100 மேற்பட்ட யானைகள்[1] 80,000 காலாட்கள், 30,000 குதிரைகள் மற்றும் பல பீரங்கிகள்[1]
இழப்புகள்
ராமராயர் உள்ளிட்ட 100,000 பேர் தெளிவில்லை, கடுமையிலிருந்து பெருமளவு

உசாத்துணைகள்

குறிப்புகள்

  1. இந்தியா டுடே Collector's edition of History

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.