தர்மடம் தீவு

தர்மடம் தீவு (Dharmadam Island; மலையாளம்:കാക്ക തുരുത്ത്) இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள கண்ணூர் மாவட்டம், தலச்சேரி நகருக்கருகில் அமைந்துள்ள ஒரு தனியார் தீவு ஆகும். 2 எக்டேர் பரப்பளவில் விரிந்திருக்கும் இச்சிறிய தீவு தர்மடம் நிலப்பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கிறது. இத்தீவிலுள்ள தென்னை மரங்களும், அடர்த்தியான புதர்களும் முழப்பிலங்காடு கடற்கரையில் இருந்து பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கின்றன.

தர்மடம் தீவு

குறைந்த அலைகள் வரும் காலங்களில் கடற்கரையிலிருந்து இத்தீவிற்கு நடந்தே செல்ல முடியும். தீவில் தரையிறங்க ஒருவருக்கு அனுமதி தேவை. முன்னர் தர்மபட்டனமாக அறியப்பட்ட இத்தீவு பௌத்தர்களின் கோட்டையாக இருந்தது.

1998 ஆம் ஆண்டில் கேரளா அரசு, சுற்றுலா வளர்ச்சிக்காக இந்த நிலத்தை எடுத்துக் கொண்டது [1]. தலச்சேரி நகரிலிருந்து 4 கிமீ தொலைவில் தர்மடம் தீவு அமைந்துள்ளது

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.