தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Construction Workers Welfare Board) என்பது தமிழக அரசினால் கட்டுமானத் தொழிலாளர்கள் நலனிற்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் ஒன்று ஆகும். இது தமிழகத் தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்குகிறது.[1] 53 வகையான கட்டுமான தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கும் நலத்திட்ட உதவிகளுக்கும் இவ்வாரியம் 30.11.1994 அன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது. [2] இதில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, விபத்து மரணம், இயற்கை மரணம் போன்ற நலத்திட்டத்தின் கீழ் உதவிபெறமுடியும்.
உருவாக்கம் | 30.11.1994 |
---|---|
நோக்கம் | கட்டுமானத் தொழிலாளர்கள் நலம் |
அமைவிடம் |
|
சேவைப் பகுதி | தமிழ் நாடு |
வலைத்தளம் |
தொழில் வகைகள்
53 வகையான கட்டுமானத் தொழில்கள்[2]
- கல் உடைப்பவர் (அ) கல் வெட்டுபவர் (அ) கல் பொடி செய்பவர்.
- கொத்தனார் (அ) செங்கல் அடுக்குபவர்.
- தச்சர்
- பெயிண்டர் அல்லது வார்னிஷ் பூசுபவர்
- கம்பி வளைப்பவர் உட்பட பிட்டர்
- சாலை குழாய் பதிப்பு பணியாளர்
- எலக்ட்ரிஷியன்
- மெக்கானிக்
- கிணறு தோண்டுபவர்
- வெல்டர்
- தலைமை கூலியாள்
- கூலியாள்
- தெளிப்பவர் மற்றும் கலப்பவர் (சாலை பரப்பும் பணி)
- மரம் அல்லது கல் அடைப்பவர்
- கிணற்றில் தூர் எடுப்பவர்
- சம்மட்டி ஆள்
- கூரை வேய்பவர்
- மேஸ்திரி
- கருமான், கொல்லன்
- மரம் அறுப்பவர்
- சந்துகள் அடைத்து நீர் உட்புகாமல் செய்பவர்
- கான்க்ரீட் மிக்ஸர் அப்ரேட்டர் உட்பட கலப்பவர்
- பம்ப் ஆபரேட்டர்
- மிக்ஸர் டிரைவர்
- ரோலர் டிரைவர்
- கனரக இயந்திர கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள கலாசிஸ் மற்றும் சுரங்க பணியாளர்
- காவலாளி
- மொசைக் பாலீஸ் செய்பவர்
- சுரங்க வழி தோண்டுபவர்
- பாறை உடைப்பவர் குவாரி வேலையாள்
- சலவைக்கல் / கடப்பாக்கல் வேலையாள்
- சாலை பணியாளர்
- கட்டுமானப் பணி தொடர்பான மண் வேலை செய்பவர்
- சுண்ணாம்பு பதப்படுத்துவோர்
- கடல் அரிப்பு தடுப்பு பணியில் ஈடுபடும் வேலையாள்
- அணைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, பாலங்கள், சாலை அல்லது மற்ற கட்டுமானப் பணிகளில் உள்ளபடியாக ஈடுபட்டுள்ள மற்ற வகையான தொழிலாளர்கள்
- அணைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, பாலங்கள், சாலை அல்லது மற்ற கட்டுமானப் பணிகளில் உள்ளபடியாக ஈடுபட்டுள்ள மற்ற வகையான தொழிலாளர்கள்
- தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வராத செங்கல் சூளை தொழிலாளர்கள்
- பந்தல் கட்டுமானம்
- தீயனைப்பு கருவிகளை பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல்
- குளிரூட்டுதல் மற்றும் சூடுபடுத்துதல் கருவிகளை பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல்
- மின்தூக்கி மற்றும் மின்படி பொருத்துதல்
- பாதுகாப்பு கதவுகள் மற்றும் கருவிகள் பொருத்துதல்
- இரும்பு மற்றும் உலோக கிராதி ஜன்னல் கதவுகள் புனைத்து கட்டுதல் மற்றும் பொருத்துதல்
- நீர் எடுக்கும் கட்டமைப்பு தொடர்பான கட்டுமானம்
- கார்பெட்டிங், பொய்கூரை விளக்கு அமைத்தல், மேற்பூசுதல் தொடர்பான உள்ளலங்காரம்
- கண்ணாடி வெட்டுதல், இழைத்தல் மற்றும் கண்ணாடி பேனல்கள் பொருத்துதல்
- சோலார் பேணல் போன்ற மின்மிகை சாதனங்கள் பொருத்துதல்
- சமையல் கூடம் போன்ற இடங்களில் நவீன அறைகள் அமைத்தல்
- முள் புனைத்து அமைக்கப்பட்ட கான்கிரீட் பொருட்கள் பொருத்துதல்
- கோல்ப் மைதானம், நீச்சல் குளம் உட்பட்ட விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளை கட்டுதல்
- கல்பெயர் பலகை, தெரு அறைகலன்கள், பேருந்து நிழற்கூரை, பணிமனைகள் நிறுத்தங்கள் மற்றும் அறிவிப்பு குறி போன்ற கட்டுமானம் மற்றும் நிறுத்துதல்
- ரோட்டரி மற்றும் செயற்கை நீருற்று போன்ற கட்டுமானம்
- பொது பூங்கா நடைபாதை போன்ற கட்டுமானம் மற்றும் இயற்கை நிலைக்காட்சி அமைத்தல்
மேற்கோள்கள்
- "வேலை வேண்டுமா: கட்டுமானத் தொழிலாளர் நல வாரியப் பணி". தமிழ் இந்து. 23 அக்டோபர் 2018. https://tamil.thehindu.com/general/education/article25294060.ece. பார்த்த நாள்: 14 டிசம்பர் 2018.
- "தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை". nic.in. பார்த்த நாள் 14 December 2018.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.