தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (Tamil Nadu Handloom Weavers' Cooperative Society), என்பது இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள பாராம்பரிய கைத்தறி நெசவாளர்களை ஒருங்கிணைக்கும் கூட்டுறவு அமைப்பாகும். இது பெரும்பாலும் கோ-ஆப்டெக்ஸ் (Co-optex) என்றே அழைக்கப்படுகிறது. தமிழக அரசின் கைத்தறி, துணிநூல், காதி, கிராமத்தொழில் (ம) கைவினைப் பொருட்கள் துறையினால் (Department of Handlooms, Handicrafts, Textiles and Khadi) இவ்வமைப்பு நிர்வகிக்கப்படுகிறது. இதற்குச் சொந்தமான விற்பனை மையங்கள் தமிழ்நாட்டின் பல ஊர்களில் அமைக்கப்பட்டுள்ளன.[1][2]

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்
வகைஅரசு நிறுவனம்
வர்த்தக பெயர்கோ-ஆப்டெக்ஸ்
Co-optex
நிறுவுகை1935
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
முக்கிய நபர்கள்த. ந. வெங்கடேஷ் (இ.ஆ.ப) மேலாண்மை இயக்குனர்
தொழில்துறைகைத்தறி
உரிமையாளர்கள்தமிழக அரசு
இணையத்தளம்www.cooptex.com

ஏற்றுமதி

இதன் பன்னாட்டுப் பிரிவு ஜெர்மனி, பிரான்சு, நெதர்லாந்து, பெல்ஜியம், எசுப்பானியம், சுவிட்சர்லாந்து, கனடா, கிரீசு, ஹாங்காங், ஐக்கிய இராச்சியம், தென் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

புதிய பொருட்கள்

கைத்தறித் துணிகளின் விற்பனையைப் பெருக்கவும் சந்தையில் பிற நிறுவனங்களினால் ஏற்படக்கூடிய போட்டியைச் சமாளிப்பதற்கும், உற்பத்தியில் புதுப்புது வகைகளை அறிமுகம் செய்கிறது இந் நிறுவனம்.

திருமணப் பட்டுப் புடவைகளில் திருமணம் செய்துகொள்ளும் இரட்டையரின் உருவங்கள் நெய்து தரப்படுகின்றன. திருக்குறளும் அதற்கான ஓவியமும் கொண்ட படுக்கை விரிப்புகளும் குழந்தைகளுக்கான ’குட்டீஸ்’ என்ற சிறப்பு வகை படுக்கை விரிப்புகளும் கிடைக்கின்றன.[3] மேலும் பட்டுப்புடவைகளில் பாரம்பரிய வடிவங்கள், இலக்கியக் கதாபாத்திரங்களின் உருவங்கள் போன்றவையும் வாடிக்கையாளரரின் விருப்பத்திற்கேற்றாற் போல உருவாக்கப்படுகின்றன.[4]

வளர்ச்சி

பல ஆண்டுகளாக தொடர்ந்து நட்டத்தில் இயங்கிவந்த இந்நிறுவனம், வேட்டி நாள், தாவணி நாள் என நாட்களைத் தொடங்கி இலாபகரமான நிறுவனமாக மாற்றம் பெற்றது.[5]

விருதுகள்

டிசம்பர் 2013 இல் இந் நிறுவனம் ’கைத்தறி உற்பத்தியில் சிறப்புப் பங்களிப்பு’ மற்றும் மிகப் பெரிய ’கைத்தறி தயாரிப்பாளர்’ என்ற வகைப்பாட்டின் கீழ் இந்திய நடுவண் அரசின் விருதினைப் பெற்றுள்ளது.[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.