தமிழ்நாடு அரசு நூலகங்கள்
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், முக்கிய நகரங்கள், ஊர்கள் அனைத்திலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவை தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
நூலக வகைகள்
தமிழ்நாட்டிலுள்ள நூலகங்கள் அனைத்தும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை;
- மாவட்ட மைய நூலகம்
- கிளை நூலகம்
- கிராம நூலகம்
- பகுதிநேர நூலகம்
நூலகப் பகுதிகள்
தமிழ்நாட்டிலுள்ள நூலகங்கள் அனைத்தும் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை;
- பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்கள் பகுதி
- இருப்புப் பகுதி
- குறிப்புகளுக்கான பகுதி
- பொதுப் பகுதி
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பகுதி.
வேலை நேரம்
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நூலகங்களும் கீழ்காணும் பட்டியல்படி வேலை நேரங்களைக் கொண்டுள்ளன.
நூலக வகை | வேலை நேரம் (காலை) |
வேலை நேரம் (மாலை) |
---|---|---|
கிளை நூலகம் | 8.00 - 11.30 மணி | 4.00 - 7.00 மணி |
கிளை நூலகம் (மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதி) |
9.00 - 12.30 மணி | 4.00 - 7.00 மணி |
கிளை நூலகம் (பேரூராட்சிப் பகுதி) |
9.00 - 12.30 மணி | 3.30 - 6.30 மணி |
கிராமநூலகம் | 9.00 - 12.30 மணி | 4.00 - 6.30 மணி |
பகுதி நேர நூலகம் | 8.00 - 11.00 மணி | ..... |
புரவலர்கள்
நூலகத்தில் ரூபாய் ஆயிரம் செலுத்துபவர்கள் நூலகப் புரவலர்களாகவும், ரூபாய் ஐந்து ஆயிரம் செலுத்துபவர்கள் பெரும் புரவலராகவும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
உறுப்பினர்கள்
நூலகம் அமைந்துள்ள பகுதியில் இருப்பவர்கள் அந்த நூலகத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். உறுப்பினர்களாகச் சேர விரும்புபவர்கள் அந்தப் பகுதியில் குடியிருப்பதற்கான அத்தாட்சியாக கீழ்காணும் ஏதாவது ஒன்றின் சான்றுக் கையொப்பமிட்ட நகலை உறுப்பினர் படிவத்துடன் சேர்த்து அளிக்க வேண்டும்.
- குடும்ப அட்டை
- ஓட்டுநர் உரிமம்
- வாக்காளர் அடையாள அட்டை
- நிரந்தர வருமானவரி அட்டை
- மாணவர் அடையாள அட்டை
- தொழிலுக்கான அடையாள அட்டை
உறுப்பினர் கட்டணம்
நூலகத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களிடம் கீழ்கண்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
நூலக வகை | சேர்க்கைக் கட்டணம் ஒரு புத்தகம் (ரூ) |
சேர்க்கைக் கட்டணம் இரண்டு புத்தகங்கள் (ரூ) |
சேர்க்கைக் கட்டணம் மூன்று புத்தகங்கள் (ரூ) |
ஆண்டுக் கட்டணம் (ரூ) |
---|---|---|---|---|
நகராட்சிப் பகுதி மற்றும் பிரிவு அ, ஆ நூலகம் |
20 | 40 | 50 | 10 |
பேரூராட்சிப் பகுதி ஊராட்சிப் பகுதி மற்றும் பிரிவு அ, ஆ நூலகம் |
15 | 25 | 30 | 5 |