நிரந்தர கணக்கு எண்

நிரந்தர கணக்கு எண் அட்டை அல்லது பான் கார்டு ('Permanent Account Number-PAN) என்பது தனிநபர், தொழில் நிறுவனங்கள், கூட்டு நிறுவங்கள் என பல்வேறு பட்ட வருமான வரி செலுத்துபர்களுக்காக இந்திய அரசாங்கத்தின் வருமான வரித்துறையால் வருமானவரிச் சட்டப்பிரிவு 139A இன் கீழ் வழங்கப்படுகிறது. இது பத்து இலக்கங்கள் கொண்டது. அவ்விலக்கங்கள் ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்ணுருக்களால் ஆனதாக இருக்கும். (எடுத்துக்காட்டு: AABPS1205E). இந்த எண்ணைத் தாங்கியதாக வழங்கப்படும் சிறு செவ்வக வடிவ அட்டை பான் கார்டு அதாவது நிரந்தர கணக்கு எண் அட்டை என நடைமுறையில் அழைக்கப்படும் வழமை உள்ளது. அட்ட்

அவசியம்

வங்கி கணக்கு, பங்கு வர்த்தக கணக்கு, வீட்டுக் கடன் கணக்கு, மோட்டர் வாகனம் வாங்க கடன், சொத்துக்கள் வாங்க என அனைத்து வகையான பயன் பாட்டிற்கும் இந்த பான் கார்டு அவசியம் என அரசால் அறிவிக்கபட்டுள்ளது.

தகுதி

  • இந்திய குடிமகன் மற்றும் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் இதை பெற தகுதியானவர்கள்.
  • 18 வயதுக்கு குறைந்த (பிறந்தது 6 மாதம் ஆன) குழைந்தைகளும் இதற்கு தகுதியானவர்கள் ஆனால் 18 வயது குறைந்தவர்களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றிதழ் காட்டாயம் இணைக்கவேண்டும்.

விண்ணப்பித்தல்

பான்கார்டு பெற விரும்புவோர் வருமான வரித்துறையின் 49-ஏ என்ற படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று இணைக்க வேண்டும்.

அடையாளச் சான்றாகப் பயன்படுத்தத் தகுதியுடையவை:

முகவரிச் சான்றாகப் பயன்படுத்தத் தகுதியுடவை:

  • ஓட்டுனர் உரிமம்
  • வாக்காளர் அடையாள அட்டை
  • குடும்ப அட்டை
  • தொலைபேசி கட்டண ரசீது
  • கடவுச் சீட்டு
  • வீட்டு வரி ரசீது
  • ஆதார் கார்டு

தற்போது ஆதார் அட்டையை மட்டும் கொண்டே பான்கார்டு விண்ணப்பிக்கலாம்

மேலும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டு முகவரி கொண்ட பிற சான்றுகளும் இதற்குத் தகுதியானவை.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.