வாக்காளர் அடையாள அட்டை
வாக்காளர் அடையாள அட்டை மன்னராட்சி முடிவுற்று ஆங்கில ஆதிக்கத்துக்குப்பின் ஜனநாயக அமைப்புக்கான ஒரு முக்கிய சாட்சி தேர்தலாகும்.
1920ல் நடந்த பொதுத்தேர்தல் முதல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1989ம் ஆண்டு வரை 25 வயதைப் பூர்த்தி அடைந்தவர்களுக்கு மட்டும் வாக்குரிமை இருந்தது. தற்போது இந்தியாவில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்குரிமை அளிக்கத் தகுதியானவர்கள்.
வாக்காளர் பட்டியல்
தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ள வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலே வாக்காளர் பட்டியலாகும். வாக்காளர் பட்டியல், சட்டமன்றத் தொகுதி வாரியாகத் தயாரிக்கப்படும். தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அதிகபட்சம் 1200 வாக்காளர்கள் என நிர்ணயித்துள்ளது.[1]
வாக்காளர் பட்டியலில் பதிவு
பத்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் ஆணையம் வீடு வீடாகச்சென்று வாக்காளர் பட்டியலை மறு ஆய்வு செய்கிறது. அவ்வாறான நேரங்களில் வெளியூர் சென்றவர்கள் படிவம் 6-ஐ பூர்த்திச் செய்து விண்ணப்பிக்கலாம். பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும்.[2]
வாக்காளர் அடையாள அட்டை
தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயமாக்கியுள்ளது. ஆனால் வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருப்பது மட்டும் உங்கள் ஓட்டுரிமையை உறுதிபடுத்தாது. உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.[3]
மேற்கோள்கள்
- http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/32928-tamilnadu-voters-special-camp.html
- http://tamil.thehindu.com/tamilnadu/article19904737.ece
- இதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்- விவேக எண்டர்பிரைசஸ்,சென்னை