தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர்

தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் [1] (அட்வகேட் ஜென்ரல்) (அ) சென்னை உயர் நீதிமன்றத் தலைமை வழக்குரைஞர் (அ) வழக்குரைஞர் தலைவர் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். இவரே தமிழக அரசு சார்பில் வழக்குகளில் வாதாடுவார் மற்றும் அரசுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குவார். உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்துக்குரியத் தகுதிகளுடன் இருப்பவர்.

வரலாறு

பிரித்தானிய நிர்வாகத்திலிருந்த சென்னை மாகாண அரசாங்கத்திற்கு சட்ட விசயங்களில் ஆலோசனை வழங்குவதற்காக இருந்த ஒரு தலைமை வழக்கறிஞர் பதவியானது மெட்ராஸ் அட்வகேட் ஜெனரல் (Advocate-General of Madras) என்பது ஆகும். சென்னை மாகாணமானது 1652 முதல் 1950 வரை இருந்தது. 1858 க்கு முன்னர், கிழக்கிந்திய கம்பெனியால் சென்னை நிர்வகிக்கப்பட்ட போது, அட்வகேட் ஜெனரல் அந்த நிறுவனத்தின் மூத்த சட்ட அதிகாரியாகவும், பெரிய பிரித்தானிய இறையாண்மையின் அட்டர்னி ஜெனரலாகவும் இருந்தார். மேலும் இவர் சென்னை சட்டமன்றத்தின் அதிகாரப்பூர்வ உறுப்பினராகவும் இருந்தார்.

அட்வகேட் ஜெனரல்களின் பட்டியல்

மதராஸ் மாகாணம்

சென்னை மாநிலம்

தமிழ்நாடு

மேற்கோள்கள்

  1. மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர்-உச்ச நீதிமன்ற இணையம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 19-04-2009
  2. Asiatic Journal, Volume 14. பக். 92.
  3. The Madras Tercentenary Commemoration Volume. பக். 62.
  4. "Miscellaneous papers of John Bruce Norton, (1815-83), barrister, Advocate General of Madras". National Archives.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.