ஏ. நவநீத கிருஷ்ணன் (வழக்கறிஞர்)

ஏ. நவநீதகிருஷ்ணன் என்பவர் 2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சி ஏற்பட்டவுடன் நியமிக்கப்பட்ட தமிழக அரசுத் தலைமை வழக்குரைஞர் ஆவார்.[1] இவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், மேற்கு பொன்னாப்பூர் கிராமத்தில் பிறந்தவர். தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் கல்லூரியில் பட்டப் படிப்பு பயின்ற இவர், சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் கூடுதல் தலைமை வழக்கறிஞர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் [2], தஞ்சாவூர் ராஜா சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நவநீதகிருஷ்ணன் ஆஜராகியுள்ளார்.டெல்லி மேல்–சபை உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இடைத் தேர்தலில், அ.தி.மு.க.வைச்சேர்ந்த ஏ.நவனீதகிருஷ்ணன் ஜூன் 26,2014 முதல் ஜூன் 29,2016 வரையிலான காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3]

மேற்கோள்கள்

  1. அரசு அட்வகேட் ஜெனரலாக ஏ.நவநீதகிருஷ்ணன் நியமனம்!.
  2. பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவர் நவநீதகிருஷ்ணன் தினமணி செய்தி
  3. ஏ.நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வானார்!
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.