தமிழ் மரபுரிமைத் திங்கள்

கனடிய நாடுளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடும் தை மாதம் தமிழ் மரபுரிமைத் திங்கள் ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1]

கனேடியத் தமிழர்
கனேடியத் தமிழர்
நபர்கள்
பரம்பல்
அரசியல்
பொருளாதாரம்
பண்பாடும் கலைகளும்
கல்வி
தமிழ்க் கல்வி
சமூக வாழ்வு
அமைப்புகள்
வரலாறு
வரலாற்றுக் காலக்கோடு
குடிவரவு
எதிர்ப்புப் போராட்டங்கள்
இலக்கியமும் ஊடகங்களும்
இலக்கியம்
வானொலிகள்
இதழ்கள்
நூல்கள்
திரைப்படத்துறை
தொலைக்காட்சிச் சேவைகள்
நிகழ்வுகள்
தமிழ் மரபுரிமைத் திங்கள்
ரொறன்ரோ தமிழியல் மாநாடு
தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்

இந்த மாதத்தில், தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், வளர்க்கும் வண்ணம், பகிரும் வண்ணம் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படும். தமிழர் தமது நல்லணெண்ணத்தை, நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் இரத்தக் கொடை, தன்னார்வலர் தொண்டு போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுவர். கனேடிய தமிழ் பாரம்பரிய மாதத்திற்கு பாடல் மற்றும் கொடி உள்ளன. இப்பாடல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் பாரம்பரிய மாதத்தில் பாடப்படுகிறது.

நோக்கங்கள்

தமிழ் மரபுரிமைத் திங்களின் நோக்கங்களாக பின்வருவன ஒழுங்கமைப்பளாளர்களால் முன்வைக்கப்படுகிறது:

  • தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் கொண்டாடுதல்.
  • உலகத் தமிழர்களின் பண்பாடு, கலைகள், மரபுகளைக் கொண்டாடுதல்.
  • தமிழர் அல்லாதவர்களோடு தமிழ் மொழி, பண்பாடு, வரலாறு பற்றிப் பகிர்ந்து கொள்ளல்.
  • பல்துறைகளில் தமிழர்களின் சாதனைகளை அடையாளப்படுத்தல்.
  • தமிழர்களின் நலத்தையும் வளர்ச்சியையும் ஊக்குவித்தல்.

வரலாறு

தமிழர்கள் செறிந்து வாழும் நகரங்கள் ரொறன்ரோ, மார்க்கம், ஏசக்சு, பிரம்ரன், ஒசாவா, விற்பி, யோர்க் ஆகியவற்றின் மாநகர அவைகள் முதலில் தமிழ் மரபுரிமைத் திங்களை அங்கீகரித்தன.

அடுத்து, ஒன்டாரியோ மாகாணத்தில் அறிவித்து தமிழ் பாரம்பரிய மாத சட்டத்தை (Tamil Heritage Month Act) நாடாளுமன்றத்தால் இயற்றியது. [2]

வெளி இணைப்புக்கள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.