தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் (Thamizukku en ontrai aluththavum) 2015 ஆம் ஆண்டு நகுல், அட்டகத்தி தினேஷ், பிந்து மாதவி மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோரின் நடிப்பில், வி. சந்திரன் தயாரிப்பில், ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படம் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்
இயக்கம்ராம்பிரகாஷ் ராயப்பா
தயாரிப்புவி.சந்திரன்
கதைராம்பிரகாஷ் ராயப்பா
இசைஎஸ். தமன்
நடிப்புநகுல்
அட்டகத்தி தினேஷ்
பிந்து மாதவி
ஐஸ்வர்யா தத்தா
சதீஸ்
ஊர்வசி
ஒளிப்பதிவுதீபக் குமார் பதி
படத்தொகுப்புவி. ஜே. சாபு ஜோசப்
கலையகம்வி.எல்.எஸ். ராக் சினிமா
விநியோகம்ரெட் ஜெயண்ட் மூவிஸ்
வெளியீடுபெப்ரவரி 20, 2015 (2015-02-20)
ஓட்டம்144 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

சூரியபுயலின் காரணமாக அலைபேசி கோபுரங்கள் செயலிழப்பதால் தகவல் தொடர்பு பாதிக்கப்படுகிறது. அப்போது நடக்கும் நிகழ்வுகளின் தொகுப்பே படத்தின் கதை.

முகிலிடம் (அட்டகத்தி தினேஷ்) தன் காதலை சொல்ல அவன் வேலைசெய்யும் இடத்திற்கு வரும் சிமி (பிந்து மாதவி) ஒரு பள்ளத்தில் சிக்கிக் கொள்கிறாள். அவள் மீது 80 டன் எடையுள்ள வாஸ்து பாறை விழும்நிலையில் உள்ளது. அலைபேசி செயலிழந்துவிடுவதால் அவள் முகிலுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியைப் பார்த்து அவளை முகில் காப்பாற்றுகிறானா? என்பது ஒரு கிளைக்கதை.

வாடகை மகிழுந்து ஓட்டுநரான ராஜாவின் (சதிஸ்) மகிழுந்தில் அணுகுண்டு உள்ளது. அலைபேசியின் மூலம் அதை வெடிக்கச் செய்ய முயற்சி செய்யும் வில்லன் அதை வெடிக்கச்செய்தானா? என்பது ஒரு கிளைக்கதை.

கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல் செயல்திட்டங்களை செய்துதரும் தொழில்நுட்ப நிபுணர் வசந்த் (நகுல்). அவனைக் காதலிக்கும் கல்லூரி மாணவி ஹரிணி (ஐஸ்வர்யா தத்தா). செயலிழந்த அலைபேசி கோபுரங்களை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடும் வசந்த் அதில் வெற்றி பெறுகிறானா? சிமி காப்பாற்றப்படுகிறாளா? வெடிகுண்டு தாக்குதலில் இருந்து மக்கள் தப்பித்தார்களா? என்பதுதான் படத்தின் முடிவு.

நடிகர்கள்

இசை

படத்தின் இசையமைப்பாளர் எஸ். தமன். பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி மற்றும் யுகபாரதி.

பாடல் வரிசை
வ.எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்கள்
1 சட்டுன்னு என்ன யுகபாரதி ஹரிஹரசுதன்
2 ரோபோ ரோமியோ மதன் கார்க்கி எம். எம். மான்சி, எம். எம். மோனிஷா
3 தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் மதன் கார்க்கி அல்போன்ஸ் ஜோசப்
4 ரோபோ ரோமியோ (கரோகி) மதன் கார்க்கி இசை மட்டும்
5 சட்டுன்னு என்ன (கரோகி) யுகபாரதி இசை மட்டும்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.