தகான் மலை
தகான் மலை (மலாய் மொழி: Gunung Tahan; ஆங்கிலம்: Mount Tahan) என்பது தீபகற்ப மலேசியாவில் மிக உயர்ந்த மலையாகும். மலேசியாவில் குனோங் தகான் என்றே பரவலாக அழைக்கப் படுகிறது. பகாங், ஜெராண்டுட் நகரில் இருந்து 76 கி.மீ. தொலைவில் இருக்கிறது. தகான் மலையின் உயரம் 2,187 மீட்டர், (7,174 அடி).[2] இந்த மலை தகான் மலைத்தொடரில் அமைந்து இருக்கிறது.
தகான் மலை | |
---|---|
![]() குனோங் தகான் | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 2,187 m (7,175 ft) [1] |
இடவியல் முக்கியத்துவம் | 2,140 m (7,020 ft) |
பட்டியல்கள் | அதி முக்கிய உச்சி |
புவியியல் | |
![]() ![]() தகான் மலை மலேசியா | |
அமைவிடம் | தாமான் நெகாரா, பகாங், மலேசியா |
State/Province | MY |
மலைத்தொடர் | தென்னாசிரிம் மலைத்தொடர் Tenasserim Hills |
Climbing | |
First ascent | 17 மே 1905. ரோபின்சன். உச்சியை அடைவதற்கு 2 மாதங்கள். |
Easiest route | கோலா தகானிலிருந்து மெலந்தாய், குனோங் ராஜா, பான்கின், பாடாங், தகான் மலை உச்சி |
தகான் மலைத்தொடர் என்பது தென்னாசிரிம் மலைத்தொடரில் ஒரு பகுதியாகும். தென்னாசிரிம் மலைத்தொடர் என்பது தென்கிழக்காசியாவில் 1,700 கி.மீ. நீளத்திற்கு பர்மா, தாய்லாந்து, தீபகற்ப மலேசியா நாடுகளில் படர்ந்து இருக்கும் ஒரு மலைத்தொடராகும்.[3]
மலாய் மொழியில் "குனோங்" என்றால் மலை. "தகான்" என்றால் தாக்குப் பிடிப்பது அல்லது சகித்துக்கொள்வது. ஆக, இந்த மலையில் ஏறுவதற்கு சற்றுக் கூடுதலான உடல் வலிமை தேவைப்படும் என்பதை அந்த மலையின் பெயரே அறிவுறுத்துகிறது. தீபகற்ப மலேசியாவில் உள்ள மலைகளில் குனோங் தகான் மலையில் ஏறுவதற்கு கடினமாக இருக்கும் என்று மலையேறுபவர்கள் கருத்து கூறுகின்றனர்.[4]
தாமான் நெகாரா
தாமான் நெகாரா (Taman Nagara) என்பது ஒரு தேசியப் பூங்காவாகும். 4,343 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. உலகிலேயே மிகப் பழமையான வெப்ப மண்டல மழைக்காடுகளைக் கொண்ட வனப்பூங்கா என்றும் புகழ்பெற்றது. இந்தக் காடுகள் 130 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை.[5] [6] இங்கு தான் தகான் மலை அமைந்து இருக்கிறது.
கோலா தகான் சிறுநகரில் இருந்து, தகான் மலையை அடைவதற்கு 54 கி.மீ. காட்டுப் பயணப்பாதை உள்ளது. ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களே மலை ஏறுவதற்கு பொருத்தமான காலம் ஆகும். நவம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரையிலான மழைக் காலங்களில், மலையேறும் பயணங்கள் ரத்துச் செய்யப் படுகின்றன.
தகான் மலையின் உச்சியை அடைவதற்கு
தாமான் நெகாரா மலைக்காடுகளில், 100க்கும் மேற்பட்ட வேறு வகையான வெப்ப மண்டலத் தாவரங்கள், வனவிலங்குகள், பூச்சிகளைப் பார்க்க முடியும். குறிப்பாக அட்டைகள், குளவிகளின் தொல்லைகள் அதிகமாக இருக்கும். இந்த மலையில் ஏறுவதற்கு உடல் வலிமையும் மன வலிமையும் தேவை. தகான் மலையின் உச்சியை அடைவதற்கு மூன்று வழிகள் உள்ளன.[7]
- கோல தகான் (வழக்கமான பாதை)
- மெராப்போ (சுங்கை ரேலாவ் பாதை)
- கிளாந்தான் (புதிய பாதை)
1. கோல தகான் வழக்கமான பாதை
புறப்படும் இடம் | உயரம் மீட்டர் |
சேரும் இடம் | உயரம் மீட்டர் |
தொலைவு கி.மீ. | மணி நேரம் |
---|---|---|---|---|---|
கோல தகான் (Kuala Tahan) | 60 | மெலந்தாய் (Melantai) | 100 | 12 | 3 |
மெலந்தாய் (Melantai) | 100 | குனோங் ராஜா (Gunung Rajah) | 576 | 9 | 6 |
குனோங் ராஜா (Gunung Rajah) | 576 | பூத்தே (Putih) | 156 | 4 | 1 |
பூத்தே (Putih) | 156 | தெக்கு (Teku) | 168 | 7 | 3 |
தெக்கு (Teku) | 168 | விரேய்ஸ் கேம்ப் (Wray's Camp) | 898 | 5 | 3 |
விரேய்ஸ் கேம்ப் (Wray's Camp) | 898 | பான்கின் (Pankin) | 1462 | 12 | 1 |
பான்கின் (Pankin) | 1462 | குனோங் தாங்கா 15 (G. Tangga 15) | 1500 | 1.5 | 1 |
குனோங் தாங்கா 15 (G. Tangga 15) | 1500 | குனோங் ரெஸ்கிட் (G. Reskit) | 1666 | 2.5 | 1 |
குனோங் ரெஸ்கிட் (G. Reskit) | 1666 | பாடாங் (Padang) | 2066 | 3 | 3 |
பாடாங் (Padang) | 2066 | தகான் மலை உச்சி (G.Tahan) | 2187 | 7 | 4 |
2. மெராப்போ - சுங்கை ரேலாவ் பாதை
இந்தப் பாதை 1993 ஆகஸ்டு மாதம் திறக்கப் பட்டது. தூரம் குறைவு. சுலபமான பாதை. இரண்டே நாட்களில் உச்சியை அடைந்து விடலாம். மெராப்போ என்பது ஒரு சிறு கிராமிய நகரம். பகாங், கோலா லிப்பிஸ் மாவட்டத்தில் இருக்கிறது. தாமான் நெகாரா, தகான் மலைக்குச் செல்வதற்கான இரண்டாவது வழி. கோலாலம்பூரில் இருந்து 244 கி.மீ; சிங்கப்பூரில் இருந்து 580 கி.மீ. தொலைவில் இருக்கிறது.[8]
புறப்படும் இடம் | உயரம் | சேரும் இடம் | உயரம் | தொலைவு கி.மீ. | மணி நேரம் |
---|---|---|---|---|---|
கோலா ஜூராம் (Kuala Juram) | 309 | கோலா லூயிஸ் (Kuala Luis) | 306 | 5 | 1 |
கோலா லூயிஸ் (Kuala Luis) | 306 | லாத்தா லூயிஸ் (Lata Luis) | 558 | 6 | 1 |
லாத்தா லூயிஸ் (Lata Luis) | 558 | கேம் கோர் (Kem Kor) | 750 | 2.5 | 1 |
கேம் கோர் (Kem Kor) | 750 | பெர்மாத்தாங் (Permatang) | 874 | 2.5 | 1 |
பெர்மாத்தாங் (Permatang) | 874 | குபாங் (Kubang) | 1406 | 3.5 | 4 |
குபாங் (Kubang) | 1406 | பெலுமுட் (Belumut) | 1493 | 1.5 | 1 |
பெலுமுட் (Belumut) | 1493 | போன்சாய் (Bonsai) | 1705 | 5.5 | 2.5 |
போன்சாய் (Bonsai) | 1705 | போத்தாக் (Botak) | 1943 | 3 | 1.5 |
போத்தாக் (Botak) | 1943 | தகான் மலை உச்சி (Gunung Tahan) | 2187 | 2.4 | 1 |
3. கிளாந்தான் புதிய பாதை
இந்தப் பாதையை மலையேறிகள் பயன்படுத்துவது குறைவு. இது ஒரு புதிய பாதை. சரியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
படத் தொகுப்பு
- சூரியன் மறையும் நேரம். கேம் போத்தாக்
- அதிகாலை நேரம். கேம் போத்தாக்
- தகான் மலை உச்சியில்
- பெயர் தெரியாத ஒரு சிகரம். கேம் போத்தாக்
- கேம் கெடுங்
- உச்சியில் பூக்களின் சொர்க்கபுரி
- கோலா தெக்குவில் ராபிள்சியா மலர்
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- "Southeast Asia: Cambodia, Laos, Thailand, Vietnam and Peninsular Malaysia". Peaklist.org. பார்த்த நாள் 2014-12-31.
- Gunung Tahan (2,187m/7174ft), located within Taman Negara National Park.The highest mountain in west Malaysia.
- Tenasserim Hills or Tenasserim Range is the geographical name of a roughly 1,700 km long mountain chain, part of the Indo-Malayan mountain system in Southeast Asia.
- Gunung Tahan may not be the highest mountain, but it sure poses one of the most challenging trails in Malaysia.
- The Taman Negara is a grandmother to the rest of the world’s rainforests. During the Ice Ages, when immense glaciers covered much of the Earth, Malaysia was blessed with a location far enough away from the ice.
- Taman Negara is situated in the centre of the Peninsular Malaysia. Covering over 4343 square kilometers of primary forest.
- There have 3 trail to reach the summit of this mountain.
- Merapoh is located in Kuala Lipis, Pahang. This is 2nd gateway to Taman Negara that opens to public since 1993. It’s about 244km from Kuala Lumpur and 580km from Singapore.
வெளி இணைப்புகள்
- John Briggs, 'Mountains of Malaysia - a Practical Guide and Manual ' , Longman Malaysia Sdn Bhd , 1985.
- "Gunung Tahan, Malaysia" on Peakbagger