டைகர் ஏர்வேஸ்
டைகர் ஏர்வேசு சிங்கப்பூர் (Tiger Airways Singapore)எனச் சேவை புரியும் டைகர் ஏர்வேசு சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் (Tiger Airways Singapore Pte Ltd) நிறுவனம் ஓர் குறைந்த கட்டணச்சேவை வான்பயணச் சேவையாளராகும். இதன் தலைமையகம் சிங்கப்பூரில் உள்ளது. இது தென்கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா, சீனா, இந்தியா ஆகியவற்றில் உள்ள மண்டல சேரிடங்களுக்கு வான்பயணச் சேவைகளை வழங்குகிறது. இதன் முதன்மை விமானத்தளமாக சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் உள்ளது.
![]() | |||||||
| |||||||
நிறுவல் | 2003 | ||||||
---|---|---|---|---|---|---|---|
வான்சேவை மையங்கள் | சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் | ||||||
வானூர்தி எண்ணிக்கை | 20 | ||||||
சேரிடங்கள் | 28 | ||||||
மகுட வாசகம் | உண்மை விலையைப் பெற்றிடு | ||||||
தாய் நிறுவனம் | டைகர் ஏர்வேசு ஹோல்டிங்சு | ||||||
தலைமையிடம் | சிங்கப்பூர் | ||||||
முக்கிய நபர்கள் | கோயே பெங் யென் (மு.செ.அ)(9 ஆகத்து 2012 முதல்)[1][2] | ||||||
இணையத்தளம் | www.tigerairways.com |
_(4337493238).jpg)
இதன் தலைமை அலுவலகம் சாங்கி வணிகப் பூங்கா சென்ட்ரல் 1இல் ஹனிவெல் கட்டிடத்தில் அமைந்துள்ளது.[3] சிறந்த குறைந்த கட்டண சேவையாளராக 2006இலும் 2010இலும் விருதுகள் பெற்றுள்ளது.
இலக்குகள்
டைகர் ஏர் சிங்கப்பூர் தற்போது சிங்கப்பூரினைச் சுற்றி ஐந்து மணிநேரத்திற்குள் செல்லக்கூடிய 38 இலக்குகளைக் கொண்டுள்ளது. இந்த 38 இலக்குகள் சிங்கப்பூரைச் சுற்றியுள்ள 9 நாடுகளில் உள்ளன.சீனா டைகர் ஏர் நிறுவனத்தின் பெரிய சந்தையாக விளங்கிவருகிறது. இங்கு மட்டும் ஒன்பது நகரங்களுக்கான விமானச் சேவையினை டைகர் ஏர் செயல்படுத்துகிறது.[4]
நகரம் | நாடு | சர்வதேச
வான்வழிப் போக்குவரத்து அமைப்பு |
சர்வதேச
பயணிகள் வான்வழிப் போக்குவரத்து ஒருங்கிணைப்பு |
விமான
நிலையம் |
தொடக்கம் | முடிவு |
---|---|---|---|---|---|---|
பன்டங்க் | இந்தோனேசியா | BDO | WICC | ஹுசைன்
சாஸ்ட் ராங்கரா சர்வதேச விமான நிலையம் |
2013 | 2014 |
பெங்களூர் | இந்தியா | BLR | VOBL | பெங்களூர்
சர்வதேச விமான நிலையம் |
2008 | நிகழ்காலம்
வரை |
சேரிடங்கள்
டைகர் ஏர்வேசு கீழ்காணும் இடங்களுக்கு தனது சேவையை வழங்குகிறது :
ஆத்திரேலியா : அடிலெயிட், அலைசு இசுபிரிங்சு, கான்பரா, கோல்டு கோஸ்ட்டு, ஹோபார்ட், லான்செசுடன், ராக்காம்ப்டன், குயின்சுலாந்து|ராக்காம்ப்டன், சன்சைன் கோஸ்ட்டு, பேர்த், மேக்கே, மெல்பேர்ண் சீனா : சென்சென், குவான்சூ, ஹைக்கூ, ஆங்காங் தென் கொரியா : இங்கியோன் இந்தியா : பெங்களூரு, சென்னை இந்தோனேசியா : ஜகார்த்தா, மெடான் மக்காவு மலேசியா : கோட்டா கினபாலு, கோலாலம்பூர், குசிங் பிலிப்பீன்சு : மணிலா சிங்கப்பூர் தாய்லாந்து : பேங்காக், பூகெத் வியட்நாம் : ஹனோய், ஹோ சி மின் நகரம்
வானூர்தி தொகுதி
மார்ச்சு 31, 2013நிலவரப்படி டைகர் ஏர்வேசின் தொகுதியில் கீழ்வரும் வானூர்திகள் உள்ளன:[5]
டைகர் ஏர்வேசு சிங்கப்பூர் தொகுதி
வானூர்தி | மொத்தம் | தருவிப்புகள்[6] | பயணியர் |
---|---|---|---|
ஏர்பஸ் ஏ320-200 | 20 | 29 | 180 |
மொத்தம் | 20 | 29 |
அனைத்து வானூர்திகளும் ஒரே கட்டணவகை கொண்ட 180 குறைந்த கட்டண இருக்கைகள் கொண்டவை. இருக்கைகளுக்கிடையேயான இடைவெளி சீர்தர இருக்கைகளிடையே 72.5 செமீயாகவும் கூடுதல் கால்வெளி உள்ள இருக்கைகள் மற்றும் வெளிவாயில் வரிசை இருக்கைகளுக்கு 97.5 செமீயாகவும் உள்ளது.[7]
சூன் 21, 2007இல் அமெரிக்க டாலர்2.2 பில்லியன் பெறுமானமுள்ள மேலும் 30 வானூர்திகளை வாங்கவும் வேண்டுமானால் மேலும் 20 வானூர்திகளைப் பெறவும் உள்ளடக்கிய தீர்மான மடலை கையெழுத்திட்டிருப்பதாக அறிவித்தது. இவை 2011இலிருந்து 2014க்குள் வழங்கப்பட வேண்டியவை.[8] இத்தீர்மானத்தை அக்டோபர் 10 அன்று டைகர் ஏர்வேசு உறுதி செய்தது. இவை ஆசிய பசுபிக் பகுதிகளுக்கான சேவைகளிலும் ஆத்திரேலியாவின் உள்ளூர் சேவைகளுக்கும் பயன்படுத்தப்போவதாக அறிவித்தது.[9] 2007ஆம் ஆண்டின் திசம்பரில் தனது விருப்பத்தேர்வாக இருந்த கூடுதல் வானூர்திகளையும் வாங்கப்போவதாகவும் இதனால் தனது மொத்த ஏர்பஸ் ஏ320 வானூர்தித் தொகுதி 70ஆக உயரும் எனவும் அறிவித்தது [10]
மேற்சான்றுகள்
- "Tiger Airways appoints new group CEO". Channel News Asia. பார்த்த நாள் 9 July 2012.
- Reuters – Fri, Jul 6, 2012 5:43 AM EDT (2012-07-06). "Singapore's Tiger names Koay Peng Yen as new CEO - Yahoo! Finance". Finance.yahoo.com. பார்த்த நாள் 2012-10-01.
- "Singapore Air Operators." (Archive) Civil Aviation Authority of Singapore. Retrieved on 31 October 2012. "17 Changi Business Park Central 1, #04-06/09 Honeywell Building, Singapore 486073"
- "Tiger Airways Services". cleartrip.com. பார்த்த நாள் 2015-11-19.
- List of aircraft on Singapore Register retrieved 3 April 2013
- "Airbus Orders & deliveries". Airbus EADS (2012-09-30). பார்த்த நாள் 2012-10-05.
- "Tiger Airways". Tiger Airways. பார்த்த நாள் 2012-10-01.
- ஏர்பஸ். "Tiger Airways orders up to 50 more A320 aircraft". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2015-11-19.
- "Tiger Airways confirms order for 30 Airbus A320 planes". Channelnewsasia.com (2007-10-10). பார்த்த நாள் 2012-10-01.
- ஏர்பஸ். "Tiger Airways looks to the future with fleet of 70 A320 aircraft". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2015-11-19.