டுரூ பேரிமோர்

டுரூ பிளித் பேரிமோர் (பிறப்பு பிப்ரவரி 22, 1975) ஒரு அமெரிக்க நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளரும் மற்றும் திரைப்பட இயக்குநரும் ஆவார். ஜான் பேரிமோரின் பேத்தியான இவர் அமெரிக்காவின் பேரிமோர் கலைக் குடும்பத்தில் கடைசி உறுப்பினர் ஆவார். தனக்கு பதினொரு வயதாகும் போது இவர் முதன்முதலில் ஒரு விளம்பரத்தில் தோன்றினார். பேரிமோர் தனது முதல் திரைப்பட அறிமுகத்தை அல்டர்டு ஸ்டேட்ஸ் படத்தில் 1980 ஆம் ஆண்டில் துவங்கினார். அதன் பின் தனக்கு திருப்புமுனையாய் அமைந்த பாத்திரத்தில் இ.டி. தி எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியல் படத்தில் நடித்தார். ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான குழந்தை நட்சத்திரங்களில் ஒருவராக விரைவில் மாறிய அவர், பல கலகலப்பான பாத்திரங்களில் தன்னை ஸ்தாபித்துக் கொள்ளும் நிலைக்குச் சென்றார்.

டுரூ பேரிமோர்

இயற் பெயர் டுரூ ப்ளைத் பேரிமோர்
பிறப்பு பெப்ரவரி 22, 1975 (1975-02-22)
கல்வர் சிட்டி, கலிபோர்னியா, அமெரிக்கா.
தொழில் நடிகை/தயாரிப்பாளர்/இயக்குநர்
நடிப்புக் காலம் 1978–இன்று வரை
இணையத்தளம் http://www.drewbarrymore.com/

போதை மருந்து மற்றும் மதுப் பயன்பாடு மிகுந்த உளைச்சலான இளமைப் பருவத்தையும் அதன் பின் மறுவாழ்வு அமர்வுகள் இரண்டையும் கடந்த பின்,[1][2] 1990 ஆம் ஆண்டில் தனது சுயசரிதையான லிட்டில் கேர்ள் லாஸ்ட் புத்தகத்தை பேரிமோர் எழுதினார். குழந்தை நட்சத்திரத்தில் இருந்து ஒரு நடிகையாக வெற்றிகரமாக அவரது மாற்றம் நிகழ்ந்தது. பாய்சன் ஐவி , பேட் கேர்ள்ஸ் , பாய்ஸ் ஆன் தி சைட் , மற்றும் எவ்ரிஒன் ஸேஸ் ஐ லவ் யூ ஆகியவை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். இதனையடுத்து, தி வெட்டிங் ஸ்டார் மற்றும் லக்கி யூ ஆகிய காதல் நகைச்சுவைப் படங்களிலும் தன்னை இவர் ஸ்தாபித்துக் கொண்டார்.

1990 ஆம் ஆண்டில், இவர் நான்ஸி ஜுவோனென் உடன் இணைந்து பிளவர் பிலிம்ஸ் என்னும் படத்தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். இவர்களது முதல் தயாரிப்பாக 1999 ஆம் ஆண்டில் பேரிமோர் நடித்த நெவர் பீன் கிஸ்டு படம் அமைந்தது. பிளவர் ஃபிலிம்ஸ் சார்லிஸ் ஏஞ்சல்ஸ் , 50 ஃபர்ஸ்ட் டேட்ஸ் , மற்றும் மியூசிக் அண்ட் லிரிக்ஸ் ஆகிய பேரிமோர் நடித்த படங்களையும் டோனி டார்கோ என்னும் மரபுப் படத்தையும் தயாரித்துள்ளது. ஹீ’ஸ் ஜஸ்ட் நாட் தேட் இன்டூ யூ , பெவர்லி ஹில்ஸ் சிஹுவாஹுவா , மற்றும் எவ்ரிபடி’ஸ் ஃபைன் ஆகியவை பேரிமோரின் சமீபத்திய வேலைகளில் அடக்கம். பேரிமோர் பீபிள் இதழ் 2007 100 மிக அழகிய மனிதர்கள் பதிப்பின் அட்டைப்படத்திலும் தோன்றினார்.

ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டம் (WFP) அமைப்பின் பட்டினிக்கு எதிரான தூதராய் பேரிமோர் அறிவிக்கப்பட்டார். அதுமுதல், அவர் 1 மில்லியன் டாலருக்கும் அதிகமாய் இந்த திட்டத்திற்கு அளித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டில் லிட்டில் எடி இன் க்ரே கார்டன்ஸ் தொடரில் அவரது பாத்திரத்திற்காக ஒரு குறுந்தொடர் அல்லது தொலைக்காட்சி படத்தில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதையும் மற்றும் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதையும் இவர் பெற்றார்.

ஆரம்ப வாழ்க்கை

பேரிமோர் கலிபோர்னியா நகரின் கல்வர் சிட்டி பகுதியில் அமெரிக்க நடிகர் ஜான் டுரூ பேரிமோருக்கும் மேற்கு ஜெர்மனியின் ப்ரானென்பர்கில் இரண்டாம் உலகப் போரின் ஹங்கேரிய அகதிகளுக்கென இருந்த இடம்பெயர்ந்தோர் முகாமில் பிறந்த நடிகையாகும் கனவைக் கொண்டிருந்த இல்டிகோ ஜெய்ட் பேரிமோருக்கும் [1][3] பிறந்தார். இவர் பிறந்த பின் இவரது பெற்றோர் விவாகரத்து செய்து கொண்டு விட்டனர்.[1] இவருக்கு ஜான் பிளித் பேரிமோர்[4] - இவரும் ஒரு நடிகர் - என்னும் ஒன்று விட்ட சகோதரரும், பிளித் டோலோரெஸ் பேரிமோர் மற்றும் பிரமா (ஜெஸிகா) பிளித் பேரிமோர் ஆகிய ஒன்றுவிட்ட சகோதரிகளும் இருக்கின்றனர்.

பேரிமோரின் கொள்ளுத் தாத்தா வரிசையின் மாரிஸ் பேரிமோர் மற்றும் ஜோர்ஜி டுரூ பேரிமோர், மாரிஸ் கோஸ்டெலோ மற்றும் மே கோஸ்டெலோ (நீ ஆல்ட்ஸ்சக்)[5] மற்றும் அவரது தாத்தா ஜான் பேரிமோர் மற்றும் டோலோரெஸ் கோஸ்டெலோ அனைவருமே நடிகர்கள்.[5] ஜான் பேரிமோர் தனது தலைமுறையில் மிகப் போற்றப்பட்ட நடிகராகவும் கூறப்பட்டதுண்டு.[1][6][7][8] இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்[2] மற்றும் சோபியா லோரென் ஆகியோரின் ஞானக் குழந்தையாகவும் டுரூ பேரிமோர் இருக்கிறார்.[9]

இவரது முதல்பெயரான டுரூ இவரது தந்தை வழி கொள்ளுப் பாட்டியான ஜோர்ஜி டுரூ பேரிமோரின் ஆரம்பப் பெயராகும். இவரது நடுப்பெயர் பிளித் இவரது கொள்ளுத் தாத்தாவான மாரிஸ் பேரிமோரால் உருவான வம்சத்தின் உண்மையான துணைப்பெயராகும்.[2]

சிக்கலான இளமைப்பருவம்

இந்த திடீர் புகழின் காரணமாக, பேரிமோர் ஒரு படுபயங்கர சிக்கலுற்ற இளமைப் பருவத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. ஒன்பது வயதில் சிகரெட் புகைக்கத் துவங்கினார், 11 வயதாய் இருக்கும்போது மதுப் பழக்கம் ஏற்பட்டது. 12 வயதில் மரிஜூவானா புகைத்தார், 13 வயதில் கோகேயின் இழுத்தார்.[1][2] அவரது இரவு வாழ்க்கை ஊடகங்களில் பிரபலமான விடயமாக ஆனது.[1] 13 வயதில் மறுவாழ்வு சிகிச்சையில் இருந்தார்.[1][2] 14 வயதில் இவர் மேற்கொண்ட தற்கொலை முயற்சி இவரை மீண்டும் மறுவாழ்வு மையத்திற்கு தள்ளியது. இதனையடுத்து பாடகர் டேவிட் கிராஸ்பி மற்றும அவரது மனைவியுடன் மூன்று மாத காலம் தங்கியிருந்தார்.[6][6] 1990 ஆம் ஆண்டில் தான் எழுதிய சுயசரிதையான லிட்டில் கேர்ள் லாஸ்ட் என்கிற புத்தகத்தில் பேரிமோர் இந்த காலகட்டத்தை விவரித்தார். விடுதலைக்காக ஒரு சிறார் நீதிமன்ற விண்ணப்பத்தில் வெற்றிபெற்ற பின், அடுத்த வருடத்தில் தனது சொந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டிற்கு இடம்பெயர்ந்தார். அதன்பின் அந்த நிலையைத் திரும்பிப் பார்க்கவில்லை.[6]

புதிய பிம்பம்

தனது அறியாப் பருவத்தின் பிந்தைய பகுதியில் பாய்சன் ஐவி (1992) திரைப்படத்தில் சந்தர்ப்பங்களை சாதகமாக்கிக் கொள்ளும் ஒரு அறியாப் பருவ கவர்ச்சிப் பெண்ணாக பேரிமோர் நடித்த பின் அவருக்கு ஒரு புதிய பிம்பம் கிடைத்தது. இந்த படம் திரையரங்கு வசூலில் தோல்வியுற்றது. ஆனால் காணொளி மற்றும் கேபிளில் பிரபலமானது.[1][10] அதே வருடத்தில், தனது 17 ஆம் வயதில், இன்டர்வியூ இதழின் அட்டைப்படம் மற்றும் அந்த புத்தகத்தின் உள்பக்க படங்களுக்காக அப்போது தனது வருங்கால கணவராய் அமையவிருந்த நடிகர் ஜேமி வால்டர்ஸ் உடன் இணைந்து நிர்வாணமாய் அபிநயம் கொடுத்தார்.[11] 1993 ஆம் ஆண்டில் கன்கிரேஸி திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக இவருக்கு கோல்டன் குளோப் பரிந்துரை கிட்டியது.[12] பிளேபாய் இதழின் 1995 ஆம் ஆண்டு பதிப்புக்கென பேரிமோர் நிர்வாணமாய் அபிநயம் கொடுத்தார்.[13][14] ”இ.டி. தி எக்ஸ்ட்ரா-டெரஸ்ட்ரியல் படத்தில் இவரை ஒரு குழந்தையாக இயக்கியிருந்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், இவரது இருபதாவது பிறந்தநாளின் போது “உன்னை மறைத்துக் கொள்” என்கிற குறிப்புடன் ஒரு கனமான துணியைப் பரிசாய்த் தந்தார்.[2] பிளேபாயில் அவர் அளித்த படங்களும், அந்த படங்களுக்கு ஸ்பீல்பெர்கின் கலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் வரைகலை கொண்டு முழுமையாய் ஆடை அணிவித்திருந்த படங்களும் பரிசுடன் இணைத்து வழங்கப்பட்டிருந்தன.[15] இந்த கால கட்டத்தில் தனது ஐந்து திரைப்படங்களில் இவர் நிர்வாணமாய் தோன்றினார். 1995 ஆம் ஆண்டில் லேட் ஷோ வித் டேவிட் லெட்டர்மேன் நிகழ்ச்சியின் போது, டேவிட் லெட்டர்மேனின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அவரது மேஜையில் தாவியமர்ந்த பேரிமோர் தனது மார்பகங்களை அவருக்கும் தனது பின்புறத்தை படக்கருவிக்கும் காண்பித்தார்.[6] இந்த சமயத்தில் கெஸ்? ஜீன்ஸ் ஆடை விளம்பரங்களிலும் தொடர்ச்சியாய் இவர் விளம்பர மங்கையாய் இருந்தார்.[16][17]

புகழுச்சிக்கு மீள்வது

1995 ஆம் ஆண்டில், பாய்ஸ் ஆன் தி சைட் படத்தில் பேரிமோர் வூப்பி கோல்டுபெர்க் மற்றும் மேரி-லூய்ஸெ பார்க்கர்[18] ஜோடியாக நடித்தார். ஜோயல் சுமேக்கரின் பேட்மேன் ஃபாரெவர் திரைப்படத்திலும் ஒரு கவுரவப் பாத்திரத்தில் நடித்தார். இதில் டோமி லீ ஜோன்ஸின் டூ ஃபேஸ் என்னும் பாத்திரத்தின் கவர்ச்சித் துணையின் பாத்திரத்தில் நடித்திருந்தார்.[19][20] அதற்கடுத்த வருடத்தில், ஸ்க்ரீம் என்னும் வெற்றிகரமான திகில் படத்தில் ஒரு கவுரவப் பாத்திரத்தில் இவர் நடித்தார். திரையரங்கு வசூலுக்கு பெரிய பங்களிப்பு செய்யக் கூடிய நடிகையாக பேரிமோர் தொடர்ந்து இருந்து வருகிறார்.[1][21] விஷ்ஃபுல் திங்கிங் (1996), தி வெட்டிங் ஸிங்கர் (1998),[22] மற்றும் ஹோம் ஃப்ரைஸ் (1998)[23] போன்ற காதல் நகைச்சுவைத் திரைப்படங்களிலும் இவர் அதிகமாய் நடித்திருக்கிறார்.

ட்ரிபெகா திரைப்பட விழாவில் பேரிமோர், மே 2007.

சார்லி’ஸ் ஏஞ்சல்ஸ் உட்பட தனது நிறுவனமான பிளவர் பிலிம்ஸ் தயாரித்த ஏராளமான படங்களில் நடித்திருப்பதோடு, நகைச்சுவை/குணச்சித்திரமான ரைடிங் இன் கார்ஸ் வித் பாய்ஸ் (2001) திரைப்படத்திலும் பேரிமோருக்கு ஒரு அதிரடியான பாத்திரம் இருந்தது. போதையில் சிக்கிய தந்தையுடன் கசந்து போன திருமண வாழ்க்கையுற்ற ஒரு அறியாப் பருவ தாயின் பாத்திரத்தில் இவர் நடித்தார். (இது பெவர்லி டி’ஓனோஃப்ரியோவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாய்க் கொண்டது).[24] 2002 ஆம் ஆண்டில் கன்ஃபெஷன்ஸ் ஆஃப் எ டேஞ்சரஸ் மைண்ட் திரைப்படத்தில் சாம் ராக்வெல் மற்றும் ஜூலியா ராபர்ட்ஸ் ஆகியோருடன் பேரிமோரும் நடித்திருந்தார்.[25]

பிளவர் பிலிம்ஸ்

1995 ஆம் ஆண்டில் பேரிமோர் நான்சி ஜுவோனெனை வர்த்தக கூட்டாளியாய் கொண்டு பிளவர் பிலிம்ஸ் என்னும் படத்தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார்.[26] இந்த நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படம் 1999 ஆம் ஆண்டில் வெளிவந்த நெவர் பீன் கிஸ்டு ஆகும்.[27] இந்த நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு சார்லி’ஸ் ஏஞ்சல்ஸ் (2000). 2000வது ஆண்டில் மிகப் பெரும் திரையரங்கு வசூலைக் குவித்த இத்திரைப்படம் பேரிமோர் மற்றும் அவரது நிறுவனம் இருவரது நிலையையும் உறுதிப்படுத்த உதவியது.[2][28]

ரிச்சர்டு கெல்லியின் அறிமுகத் திரைப்படமான டோனி டோர்கோ மிரட்டலில் சிக்கிய சமயத்தில் களமிறங்கிய பேரிமோர் ஃபிளவர் பிலிம்ஸில் இருந்து படத்திற்கு நிதியுதவி செய்தார். அத்துடன் அப்படத்தில் கரேன் போமெராய் என்னும் சிறிய பாத்திரத்தையும் செய்தார்.[29] 9/11 சம்பவத்தையொட்டிய காலத்தில் இந்த படம் வெற்றிபெற முடியவில்லை என்றாலும் படத்தின் இறுவட்டு வெளியீட்டிற்குப் பிறகு படத்திற்கு முன்னோடிப் பட அந்தஸ்து கிட்டியது.[29]

2003 ஆம் ஆண்டில், சார்லி’ஸ் ஏஞ்சல்ஸ்: ஃபுல் திராட்டில் படத்தில் டிலான் சாண்டர்ஸாக தனது பாத்திரத்தை மீண்டும் செய்தார்.[1][28] ஆலிவ், தி அதர் ரீஇன்டீர் [30] நடிப்புக்காக எம்மி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் சக நட்சத்திரமான ஆடம் சாண்ட்லரின் ஹேப்பி மேடிசன் நிறுவனத்துடன் இணைந்து பிளவர் பிலிம்ஸ் 50 ஃபர்ஸ்ட் டேட்ஸ் படத்தை தயாரித்தது.[31][32][33]

50 ஃபர்ஸ்ட் டேட்ஸ் படத்தைத் தொடர்ந்து ஃபீவர் பிட்ச் (2005) திரைப்படம் வெளியானது. 2007 ஆம் ஆண்டில் மியூசிக் அண்ட் லிரிக்ஸ் மற்றும் லக்கி யூ வெளிவந்தன.[34][35] 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த பெவர்லி ஹில்ஸ் சிஹுவாஹுவா , மற்றும் 2009 ஆம் ஆண்டில் வெளிவந்த ஹீ’ஸ் ஜஸ்ட் நாட் தேட் இன்டூ யூ , கிரே கார்டன்ஸ் மற்றும் எவ்ரிபடி’ஸ் ஃபைன் ஆகியவை பேரிமோரின் மிக சமீபத்திய வேலைகளில் அடக்கம்.

பேரிமோர் இயக்குநராய் அறிமுகமான விப் இட் திரைப்படம் 2009 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியானது. விப் இட் படத்தில் எலென் பேஜ் மற்றும் மர்சியா கே ஹார்டன் நடித்திருந்தனர். பேரிமோரும் இந்த படத்தில் நடித்திருந்தார்.[36]

தொழில்வாழ்க்கையின் மற்ற சிறப்பம்சங்கள்

ஃபேமிலி கை எனும் அசைவூட்ட நகைச்சுவைத் தொடரில் பிரையன் கிரிபினின் தோழி ஜிலியான் பாத்திரத்தில் பேரிமோர் தொடர்ந்து தோற்றமளித்தார். எட்டு அத்தியாயங்களில் அவர் தோன்றியிருக்கிறார்.[37] மை டேட் வித் டுரூ என்னும் 2005 ஆம் ஆண்டு ஆவணப்படத்தின் கருப்பொருளாக டுரூ இருந்தார்.[37][38][39][40] இப்படத்தில், பட படைப்பாளியாக விரும்புகிற பேரிமோரின் ரசிகர் ஒருவர், அவருடன் நேரம் செலவிடுவதற்கு தன்னிடம் உள்ள குறைந்த வளங்களை திறம்பட கையாளுகிறார்.[41]

பிப்ரவரி 3, 2004 அன்று, ஹாலிவுட் புகழ்க்கூட அரங்கில் இவர் நட்சத்திரமாய் கவுரவம் பெற்றார்.[42]

ஜோஸட் ஷீரன் ஷைனர், பேரிமோர், காண்டலிஸா ரைஸ், மற்றும் பால் டெர்கட்

பேரிமோரின் படங்கள் உலகளாவிய அளவில் 2.3 பில்லியன் டாலருக்கும் அதிகமாய் வசூல் குவித்திருக்கின்றன. 2006 ஆம் ஆண்டில் ஒரு படத்திற்கு இரண்டாவது மிக அதிகமாய் ஊதியம் பெற்ற நடிகைகளில் இவரும் ஒருவராவார்.[43]

பிப்ரவரி 3, 2007 அன்று, சாட்டர்டே நைட் லைவ் (SNL) நிகழ்ச்சியை ஐந்தாம் முறையாக[28] தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் வரலாற்றில் கேண்டிஸ் பெர்கெனுக்குப் பிறகு இச்சாதனையை மேற்கொள்ளும் இரண்டாவது பெண் தொகுப்பாளரெனும் பெருமை பெற்றார். மீண்டும் இந்த நிகழ்ச்சியை அக்டோபர் 10௦, 2009 அன்று தொகுத்து வழங்கினார். இதன் மூலம் ஆறுமுறை இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மிகக் குறைந்த வயது பிரபலம் என்னும் சாதனையை பேரிமோர் இன்னும் கொண்டுள்ளார் (1982, ஏழு வயதில்).[44][45]

2007 ஆம் ஆண்டில் கவர்கேர்ள் அழகுப் பொருள் விளம்பர மங்கை மற்றும் செய்தித்தொடர்பாளராக பேரிமோர் ஆனார்.[46] அத்துடன் பீபிள் பத்திரிகை'யின் வருடாந்திர 100 மிக அழகிய மனிதர்கள் வரிசையிலும் முதலிடம் பெற்றார்.[47] 2007 ஆம் ஆண்டில், குஸி (Gucci) நகை வரிசைக்கான புதிய விளம்பர முகமாகவும் இவர் அறிவிக்கப்பட்டார்.[48][49]

2007 ஆம் ஆண்டு மே மாதத்தில், ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டத்தில்[50][51] பட்டினிக்கு எதிரான தூதராக அறிவிக்கப்பட்ட பேரிமோர் பின்னர் அந்த திட்டத்திற்கு 1 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையளித்தார்.[28][52]

சொந்த வாழ்க்கை

1991 ஆம் ஆண்டில், தனது பதினாறாவது வயதில், ஹாலிவுட் படத்தயாரிப்பாளர் லேலேண்ட் ஹேவார்டின் பேரன் லேலேண்ட் ஹேவார்டு உடன் பேரிமோர் நிச்சயமானார்.[53] ஆயினும், ஒரு சில மாதங்களின் பின், இந்த நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டு விட்டது.[54] அதன்பின் வெகுவிரைவில், பேரிமோர் இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜேம் வால்டர்ஸ் உடன் 1992–93 ஆம் ஆண்டுகாலத்தில் நிச்சயம் செய்து கொண்டு இணைந்து வசித்து வந்தார்.[55]

மதுகலந்து கொடுப்பவராக இருந்து மதுக்கூட அதிபராய் ஆன ஜெரிமி தாமஸ் உடன் 1994 ஆம் ஆண்டில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 28 வரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தார்.[1][6] நகைச்சுவை நடிகரான டாம் கிரீன் உடனான இவரது இரண்டாம் திருமணம் ஜூலை 7, 2001 முதல் அக்டோபர் 15, 2002 வரை நீடித்தது.[56][57] கிரீன் 2001 ஆம் ஆண்டு டிசம்பரில் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்.[57] 2002 ஆம் ஆண்டில், பேரிமோர் ஸ்ட்ரோக்ஸ்’ குழுவின் டிரம் இசைக் கலைஞரான ஃபேப்ரிஸியோ மோரெட்டியுடன் நேரம் செலவிடத் துவங்கினார். பின் வெகுவிரைவில் அவர்கள் ஒரு இசைக்கச்சேரியில் சந்தித்தனர்.[1][28] ஆயினும், அவர்களது ஐந்து ஆண்டு கால உறவு ஜனவரி 10, 2007 அன்று முடிவுக்கு வந்தது.[28][58] சமீபத்தில் இவர் ஜஸ்டின் லாங் உடன் பொழுதைக் கழித்தார்.[59] ஆயினும், இவர்கள் தங்களது பிரிவை 2008 ஆம் ஆண்டு சூலையில் அறிவித்தனர்.[60] இந்த தம்பதி 2009 ஆம் ஆண்டில் மீண்டும் சோடி சேர்ந்தது.[61]

1990களில் பேரிமோர் பலசமயங்களில் இருபால் விரும்பியாய் வர்ணிக்கப்பட்டார்.[62] 2004 ஆம் ஆண்டில் அவர் கூறும்போது, “எப்படி ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து இருப்பது அழகாய் இருக்கிறதோ, அதேபோல ஒரு பெண்ணும் பெண்ணும் இணைந்து இருப்பதும் அழகாய்த் தான் இருக்கிறது. ஒரு பெண்ணுடன் இருப்பது எனது சொந்த உடலை ஆராய்வதாய் இருக்கிறது. எனது இளம் வயதில் ஏராளமான பெண்களுடன் பொழுதைக் கழித்திருக்கிறேன். மொத்தமாய் எனக்கு அது ரொம்பப் பிடிக்கும்" என்று கூறியிருந்தார்.[63] 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், முன்னாள் பத்திரிகை ஆசிரியரான ஜேன் பிராட் தனது வானொலி நிகழ்ச்சியில் பேசுகையில் தொன்னூறுகளின் மத்தியில் பேரிமோருடன் தனக்கு காதல் உறவு இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.[64]

ஆரம்பத்தில் ஒரு சைவ உணவாளராய் இருந்த பேரிமோர், இப்போது அசைவம் சாப்பிடத் துவங்கியிருக்கிறார்.[65]

மேலும் காண்க

  • பேரிமோர் குடும்பம்

குறிப்புதவிகள்

  1. "Drew Barrymore". Hello Magazine. பார்த்த நாள் 2008-07-02.
  2. "Drew Barrymore". Inside the Actors Studio. Bravo. 2003-06-22. No. 910, season 9.
  3. "Actor John D. Barrymore dies at 72". USA Today (2004-11-29). பார்த்த நாள் 2008-09-07.
  4. "Actor Barrymore attacked at home". BBC (2002-05-06). பார்த்த நாள் 2008-09-07.
  5. ஸ்டீன் ஹாஃப்மேன், கரோல். The Barrymores: Hollywood's First Family . யுனிவர்சிட்டி பிரஸ் ஆஃப் கெண்டகி, 2001. ISBN 0-8131-2213-9.
  6. "Drew Barrymore Biography". People. பார்த்த நாள் 2008-07-02.
  7. "The Costello Family." BarrymoreFamily.com .
  8. "The Drew family." BarrymoreFamily.com .
  9. "Baby Booty". The Sunday Times (2007-12-02). பார்த்த நாள் 2009-03-23.
  10. Gleiberman, Owen (1992-05-08). "Poison Ivy Review". Entertainment Weekly. பார்த்த நாள் 2008-07-25.
  11. Hruska, Bronwen (1999-05-14). "Summer Sneaks Drew, We Hardley Knew Ye The littlest Barrymore finally seems back on track in solid film roles. Though she's already lived several lives, her future looks bright. After all, she's only 20.". Los Angeles Times: 5.
  12. Luscombe, Belinda (1995-10-02). "Ms. Barrymore, Super Groupie". Time. பார்த்த நாள் 2008-07-20.
  13. Farley, Christopher John (1995-03-27). "Low Voltage, High Power". Time. பார்த்த நாள் 2008-07-20.
  14. The E! True Hollywood Story: Drew Barrymore. E!. 2007-11-28.
  15. Spindler, Amy M. (1993-09-12). "Trash Fash". New York Times. பார்த்த நாள் 2008-07-03.
  16. Mills, Nancy (1998-02-09). "Now, Drew Love! Hollywood's Wild Thing Has The Man - & Role – Of Her Dreams". New York Daily News. பார்த்த நாள் 2008-07-03.
  17. Lowry, Brian (1995-01-23). "Boys on the Side". Variety. பார்த்த நாள் 2008-07-25.
  18. Travers, Peter (2000-12-08). "Batman Forever". Rolling Stone. பார்த்த நாள் 2008-09-07.
  19. Batman Forever[DVD].Warner Brothers.
  20. Haflidason, Almar (2001-05-24). "Scream". BBC. பார்த்த நாள் 2008-09-07.
  21. Brantley, Ben (2006-04-28). "The Wedding Singer". New York Times. பார்த்த நாள் 2008-09-07.
  22. Lovell, Glenn (1998-09-21). "Home Fries". Variety. பார்த்த நாள் 2008-07-25.
  23. "Hello Magazine Filmography – Drew Barrymore". Hello Magazine. பார்த்த நாள் 2008-07-02.
  24. Travers, Peter (2003-01-16). "Confessions of a Dangerous Mind". Rolling Stone. பார்த்த நாள் 2008-09-07.
  25. Kit, Borys (2005-04-06). "Flower grows into Warner Bros. pact". Roger Ebert.com. மூல முகவரியிலிருந்து 2008-12-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-10-12.
  26. Ebert, Roger (1999-04-09). "Never Been Kissed Review". Chicago Sun-Times. Roger Ebert.com. பார்த்த நாள் 2008-07-25.
  27. "Drew Barrymore Biography – Page 2". People. பார்த்த நாள் 2008-07-02.
  28. Snider, Mike (2005-02-14). "'Darko' takes a long, strange trip". USA Today. பார்த்த நாள் 2008-10-12.
  29. "Drew Barrymore Awards". IMDB.com. பார்த்த நாள் 2008-07-03.
  30. Pierce, Nev (2004-04-05). "50 First Dates". BBC. பார்த்த நாள் 2008-09-07.
  31. "Drew Barrymore hits milestone of 30". USA Today (2005-04-04). பார்த்த நாள் 2008-09-07.
  32. Ebert, Roger (2004-02-13). "Review: 50 First Dates". Roger Ebert.com. பார்த்த நாள் 2008-09-07.
  33. Schwarzbaum, Lisa (2007-02-13). "Music and Lyrics". Entertainment Weekly. பார்த்த நாள் 2008-09-07.
  34. Lowry, Brian (2007-05-02). "Lucky You". Variety. பார்த்த நாள் 2008-09-07.
  35. Vess, Laura (2009-07-17). "Roller Girl Fantasies in Drew Barrymore's 'Whip It'". SheWired.com. http://www.shewired.com/Article.cfm?ID=23275. பார்த்த நாள்: 2009-07-17.
  36. "Whistle While Your Wife Works". Steve Callaghan and Greg Colton. Family Guy. Fox. 2006-11-12. No. 5, season 5.
  37. "Prick Up Your Ears". Cherry Chevapravatdumrong and James Purdum. Family Guy. Fox. 2006-11-19. No. 6, season 5.
  38. "Chick Cancer". Alec Sulkin, Wellesley Wild, and Pete Michels. Family Guy. Fox. 2006-11-26. No. 7, season 5.
  39. "Barely Legal". Kirker Butler and Zac Moncrief. Family Guy. Fox. 2006-12-17. No. 8, season 5.
  40. Gleiberman, Owen (2005-08-03). "My Date with Drew". Entertainment Weekly. பார்த்த நாள் 2008-09-07.
  41. "Barrymore gets star on Walk of Fame". RTE (2004-02-04). பார்த்த நாள் 2008-09-07.
  42. "Witherspoon Hollywood’s top-paid actress". AP. MSNBC (2007-11-30). பார்த்த நாள் 2008-09-09.
  43. "Drew Barrymore". People. பார்த்த நாள் 2008-07-03.
  44. "Saturday Night Live Backstage – Green Room – Key Hosts". NBC. பார்த்த நாள் 2008-07-25.
  45. Critchell, Samantha (2007-04-11). "Drew Barrymore Is Newest Covergirl Model". Washington Post. பார்த்த நாள் 2008-09-07.
  46. "Most Beautiful People 2007". People. பார்த்த நாள் 2008-09-07.
  47. La Ferla, Ruth (2008-03-09). "A Glossy Rehab for Tattered Careers". New York Times. பார்த்த நாள் 2008-07-20.
  48. "Drew Barrymore Goes Bling". MTV (2007-07-05). பார்த்த நாள் 2008-09-07.
  49. "Actress Drew Barrymore becomes advocate for UN World Food Programme". un.org (UN News Centre). 2007-05-09. http://www.un.org/apps/news/story.asp?NewsID=22500&Cr=food&Cr1=. பார்த்த நாள்: 2007-05-15.
  50. "Drew Barrymore Becomes WFP Ambassador". FOX News (2007-05-11). பார்த்த நாள் 2008-09-07.
  51. "Actress Drew Barrymore donates $1 million to UN anti-hunger programme". un.org (UN News Centre). 2008-03-03. http://www.un.org/apps/news/story.asp?NewsID=25821&Cr=WFP&Cr1=. பார்த்த நாள்: 2008-03-19.
  52. Sporkin, Elizabeth (1991-02-25). "They'll Take Romance".
  53. Kahn, Toby (1992-09-14). "Passages".
  54. "Barrymore takes 'Control' of Fisher role". Variety. பார்த்த நாள் 2009-01-15.
  55. Silverman, Stephen M. (2001-07-10). "Oops! Barrymore, Green Do It Again". People. பார்த்த நாள் 2008-09-07.
  56. Darst, Jeanne (2001-12-18). "Tom Green Files for a Divorce from Drew". People. பார்த்த நாள் 2008-09-07.
  57. White, Nicholas (2007-02-08). "Drew Barrymore Says She's Loving Single Life". People. பார்த்த நாள் 2008-09-07.
  58. "Justin Long Takes Drew Barrymore Home to Meet the Parents". People (2007-11-28). பார்த்த நாள் 2008-09-07.
  59. "Drew Barrymore and Justin Long end relationship". Fox News.com (2008-07-08). பார்த்த நாள் 2008-09-09.
  60. "Drew Barrymore, Justin Long Back Together … for a Movie". Us Weekly (2009-03-31). பார்த்த நாள் 2009-03-31.
  61. Hobson, Louis B. (1997-03-04). "True Drew". Canoe Jam!.
  62. Radice, Sophie (2004-05-09). "When hello really means bi for now". The Guardian. http://www.guardian.co.uk/theobserver/2004/may/09/featuresreview.review. பார்த்த நாள்: 2008-09-07.
  63. Kelly, Keith J. (2007-03-28). "Bosom Buddies – Pratt hit Sirius Airwaves, drops Bombshell". New York Post. பார்த்த நாள் 2008-09-07.
  64. Fee, Gayle; Laura Raposa with Nichole Gleisner (2004-09-22). "Ex-vegan Drew finds `Sausage Guy' attire suits her to a 'T'". The Boston Herald. http://pqasb.pqarchiver.com/bostonherald/access/697406531.html?dids=697406531:697406531&FMT=ABS. பார்த்த நாள்: 2008-12-13.

கூடுதல் வாசிப்பு

  • ஆரான்ஸன், வர்ஜினியா. டுரூ பேரிமோர் . செல்ஸீயா ஹவுஸ், 1999. ISBN 0-7910-5306-7
  • பேங்க்ஸ்டன், ஜான். டுரூ பேரிமோர் செல்ஸியா ஹவுஸ் பப்ளிஷர்ஸ், 2002. ISBN 0-7910-6772-6
  • பேரிமோர், டுரூ. லிட்டில் கேர்ள் லாஸ்ட் . பாக்கெட் ஸ்டார் புக்ஸ், 1990. ISBN 0-671-68923-1
  • எல்லிஸ், லூஸி. டுரூ பேரிமோர்: தி பயோகிராபி . அவுரம் பிரஸ், 2004. ISBN 1-84513-032-4
  • ஹில், ஆனி E. டுரூ பேரிமோர் . லூசண்ட் புக்ஸ், 2001. ISBN 1-56006-831-0

புற இணைப்புகள்

வார்ப்புரு:GoldenGlobeBestActressTVMiniseriesFilm 2000–2019 வார்ப்புரு:ScreenActorsGuildAward FemaleTVMiniseriesMovie 1994–2009

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.