டாலசு- வொர்த் கோட்டை பன்னாட்டு வானூர்தி நிலையம்

டாலசு/வொர்த் கோட்டை பன்னாட்டு வானூர்தி நிலையம் (Dallas/Fort Worth International Airport, (ஐஏடிஏ: DFW, ஐசிஏஓ: KDFW, எப்ஏஏ LID: DFW)) டாலஸ் நகருக்கும் வொர்த் கோட்டை நகருக்கும் இடையில் அமைந்துள்ள டெக்சஸ் மாநிலத்தின் மிகுந்த போக்குவரத்துடைய வானூர்தி நிலையமாகும்.[1] இது பொதுவாக டாலசு–வொர்த் கோட்டை பெருநகரப் பகுதிகள் இணைந்த கூட்டு நகரப் பகுதிக்கு சேவை வழங்குகிறது.

டல்லாசு/வொர்த் கோட்டை பன்னாட்டு வானூர்தி நிலையம்
ஐஏடிஏ: DFWஐசிஏஓ: KDFWஎஃப்ஏஏ அ.அ: DFW
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
உரிமையாளர் டாலஸ் நகரம்

வொர்த் கோட்டை நகரம்

இயக்குனர் டிஎஃப்டபுள்யூ வானூர்தி நிலைய வாரியம்
சேவை புரிவது டாலஸ்-வொர்த் கோட்டை கூட்டுப் பெருநகரம்
அமைவிடம் கொப்பல், யூலெசு,கிரேப்வைன், இர்விங்
மையம்
உயரம் AMSL 607 ft / 185 m
ஆள்கூறுகள் 32°53′49″N 097°02′17″W
இணையத்தளம் www.dfwairport.com
நிலப்படம்
FAA airport diagram
FAA airport diagram
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
13L/31R 9 2,743 பைஞ்சுதை
13R/31L 9 2 பைஞ்சுதை
17C/35C 13 4 பைஞ்சுதை
17L/35R 8 2 பைஞ்சுதை
17R/35L 13 4 பைஞ்சுதை
18L/36R 13 4 பைஞ்சுதை
18R/36L 13 4 பைஞ்சுதை
உலங்கு களங்கள்
எண்ணிக்கை நீளம் மேற்பரப்பு
ft m
H1 158 48 பைஞ்சுதை
புள்ளிவிவரங்கள் (2010)
பயணிகள் 56.6
வானூர்தி இயக்கங்கள் 652.1
மூலம்: வானூர்தி நிலையங்களின் பன்னாட்டுக் குழு[1][2]

டிஎஃப்டபுள்யூ என்ற ஆங்கிலச் சுருக்கத்தினால் அறியப்படும் இந்த வானூர்தி நிலையம் உலகின் வானூர்தி இயக்கப் போக்குவரத்து மிகுந்த நிலையங்களில் நான்காவதாக உள்ளது.[2] பயணிகள் போக்குவரத்தின் அடிப்படையில் இது உலகின் எட்டாவது போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக விளங்குகிறது.[1] அமெரிக்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரும் முனைய மையமாக விளங்குகிறது.

டிஎஃப்டபுள்யூ நிலையம் ஒரு வானூர்தி நிலைய நகரம் எனக் கருதப்படுகிறது. தனியான அஞ்சலக சுட்டெண்ணைக் கொண்ட இந்நிலையத்தின் பொதுச்சேவைகளுக்கு தனி அமைப்பு உள்ளது. ஐக்கிய அமெரிக்க அஞ்சல்துறை இதற்கெனத் தனியாக டிஎஃப்டபுள்யூ ஏர்போர்ட், டிஎக்ஸ் என்ற அடையாளத்தை வழங்கியுள்ளது.[3]

18,076 ஏக்கர்கள் (7,315 ha) நிலப்பரப்பில்[4] அமைந்துள்ள இந்த வானூர்தி நிலையம் நிலப்பரப்பளவில் டெக்சசின் மிகப்பெரிய ஒன்றாகவும் ஐக்கிய அமெரிக்காவில் டென்வர் வானூர்தி நிலையத்தை அடுத்து இரண்டாவதாகவும் உள்ளது.[5]

இந்த வானூர்தி நிலையத்தின் நிர்வாகத்தை டிஎஃப்டபுள்யூ வானூர்தி நிலைய வாரியம் மேற்கொள்கிறது. இதன் வாரிய உறுப்பினர்களை இந்த நிலையத்தின் உரிமையாளர் நகரங்களான டாலசும் வொர்த் கோட்டையும் நியமிக்கின்றன. இந்த வானூர்தி நிலையம் நான்கு புறநகர் பகுதிகளில் அமைந்துள்ளதால், ஆளுமை குறித்த பல சட்டபூர்வ வழக்குகள் எழுந்துள்ளன. தனது அண்மைப் பகுதிகளுடன் சுமுக உறவை மேற்கொள்ள நிலைய வாரியம் இர்விங், யூலெசு, கிரேப்வைன், கொப்பல் புறநகர்ப் பகுதிகளிலிருந்து வாக்களிக்க உரிமை இல்லா உறுப்பினர்களை ஏற்றுள்ளது.

மேற்சான்றுகோள்கள்

  1. "Passenger Traffic 2010 FINAL". Airports Council International. பார்த்த நாள் August 6, 2011.
  2. "Traffic movements 2010 FINAL". Airports Council International. பார்த்த நாள் August 6, 2011.
  3. "Contact Us". Dallas/Fort Worth International Airport. பார்த்த நாள் July 6, 2012.
  4. "DFW Airport Fast Facts". Dallas/Fort Worth International Airport. பார்த்த நாள் July 6, 2012.
  5. "U.S. Department of Transportation, Research and Innovative Technology Administration, Bureau of Transportation Statistics, Office of Airline Information, T-100 International Segment Data, Special Calculation, September 2010". Bureau of Transportation Statistics. பார்த்த நாள் August 6, 2011.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.