ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா

ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா ((Jyotiraditya Madhavrao Scindia, பிறப்பு 1 சனவரி 1971) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஒரு காலத்தில் குவாலியரை ஆட்சிசெய்த சிந்தியா குடும்பத்தைச் சேர்ந்தவர். மேலும் இவர் மத்தியப் பிரதேசத்தின் குணா நாடாளுமன்றத் தொகுதி மக்களவை உறுப்பினர். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மேலும் இவர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் மின்சாரத் துறைக்கான தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சராக 2012 அக்டோபர் முதல் 2014வரை இருந்தார். மேலும் இவர் குவாலியரின் கௌவ அரசர் பட்டதுடன் இருக்கிறார். அதாவது குவாலியர் சமஸ்தானத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று அவர் அதன் அரசராக இருந்திருப்பார்.[1][2]

ஜோதிர் ஆதித்யா சிந்தியா
Jyotiraditya Scindia
குணா தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
24 பிப்ரவரி 2002  23 மே 2019
முன்னவர் மாதவராவ் சிந்தியா
பின்வந்தவர் மரு.K.P.யாதவ்
மின்சாரத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)
பதவியில்
28 அக்டோபர் 2012  25 மே 2014
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் வீரப்ப மொய்லி
பின்வந்தவர் பியூஷ் கோயல்
கௌரவ குவாலியர் மகாராஜா
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2001
முன்னவர் மாதவராவ் சிந்தியா
தனிநபர் தகவல்
பிறப்பு 1 சனவரி 1971 (1971-01-01)
இந்தியா, மகாராட்டிரம், மும்பை
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) பிரியதர்சிணி ராஜே சிந்தியா (1994இல் மணந்தார்)
உறவினர் மாதவராவ் சிந்தியா காண்க சிந்தியா
பிள்ளைகள் 2
இருப்பிடம் செய் விலாசு மகால், குவாலியர், மத்தியப் பிரதேசம், இந்தியா
புது தில்லி
படித்த கல்வி நிறுவனங்கள் டூன் பள்ளி
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
ஸ்டான்போர்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்
இணையம் jyotiradityamscindia.com

ஆரம்ப வாழ்கை

மராத்தா குடும்பத்தில் 1971 சனவரி முதல் நாளன்று பம்பாயில் சிந்தியா பிறந்தார்.[3] இவரது பெற்றோர் மாதவராவ் சிந்தியா மற்றும் மாதவி ராஜே சிந்தியா ஆவர். இவர் மாநகரின் காம்பியன் பள்ளியிலும் தேராதூனின் டூன் பள்ளியிலும் படித்தார்.[4] ப1993இல் இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டம் பெற்றார். 2001இல், இவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பயின்று பட்டம் பெற்றார்.[5][6]

1947இல் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட சமஸ்தானமான குவாலியரின் கடைசி மகாராஜாவாக இருந்த ஜிவாஜிராவ் சிந்தியா. இவருக்கு, சுதந்திர இந்தியாவில் மற்ற இளவரசர்களைப் போலவே பட்டம் மற்றும் சலுகைகள், ஆண்டு மானியம் போன்றவை வழங்கப்பட்டன. 1961இல் இவரது மரணத்துக்குப் பிறகு இவரது மகனான மாதவ்ராவ் சிந்தியா (ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியாவின் தந்தை) குவாலியர் மகாராஜா என்ற பட்டத்தைப் பெற்றார். 1971 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 26 வது திருத்தத்தின்படி,[7] இந்தியாவின் முன்னாள் மன்னர்களின் பட்டங்கள் மானியங்கள் போன்றவை ஒழிக்கப்பட்டன.[8]

ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா வடோதராவின் கெய்க்வாட் குடும்பத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி ராஜே சிந்தியாவை மணந்தார்.

அரசியல் வாழ்வு

இவருது தந்தை மாதவ ராவ் சிந்தியா மறைவுக்குப் பிறகு 2002 பெப்ரவரியில் குணா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] இவர் 2004 இல் மீண்டும் இத்தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்,[9] பின்னர் 2007இல் தகவல்தொழில்நுட்பத் துறை இணையமைச்சர், 2009இல் வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பதவிவகித்தார். 2012இல் மின்சாரத் துறைக்கு தனிப்பொறுப்பு வகித்து இணையமைச்சரானார்.[9]

மேற்கோள்கள்

  1. Archived 31 October 2012 at the வந்தவழி இயந்திரம்.
  2. "Ministry of Power". Powermin.nic.in. பார்த்த நாள் 2013-07-18.
  3. The Indian Princes and their States. Cambridge University Press. https://books.google.com/books?id=Kz1-mtazYqEC&pg=PA35.
  4. "The evolution of Honorable Shri. Jyotiraditya Scindia". Times of India. http://timesofindia.indiatimes.com/delhi-times/the-evolution-of-jyotiraditya-scindia/articleshow/11710390.cms. பார்த்த நாள்: 2009-06-21.
  5. "Honorable Shri. Jyotiraditya Madhavrao Scindia - Minister of State for Commerce & Industry". Department of Commerce, Government of India. மூல முகவரியிலிருந்து 21 July 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-03-08.
  6. "Jyotiraditya M. Scindia - Minister of State for Commerce & Industry". Department of Industrial Policy & Promotion, Government of India. மூல முகவரியிலிருந்து 22 March 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2011-03-08.
  7. The Constitution (26 Amendment) Act, 1971, Government of India, 1971, http://indiacode.nic.in/coiweb/amend/amend26.htm, பார்த்த நாள்: 9 November 2011
  8. 1. ., "Through a constitutional amendment passed in 1971, Indira Gandhi stripped the princes of the titles, privy purses and regal privileges which her father's government had granted." (p 278). 2. V. S. Naipaul (8 April 2003), India: A Wounded Civilization, Random House Digital, Inc., pp. 37–, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4000-3075-0, https://books.google.com/books?id=XYeWbmq7pkIC&pg=PT37, பார்த்த நாள்: 6 November 2011 Quote: "The princes of India – their number and variety reflecting to a large extent the chaos that had come to the country with the break up of the Mughal empire – had lost real power in the British time. Through generations of idle servitude they had grown to specialize only in style. A bogus, extinguishable glamour: in 1947, with Independence, they had lost their state, and Mrs. Gandhi in 1971 had, without much public outcry, abolished their privy purses and titles." (pp 37–38). 3. Schmidt, Karl J. (1995), An atlas and survey of South Asian history, M.E. Sharpe, p. 78, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-56324-334-9, https://books.google.com/books?id=FzmkFXSgxqgC&pg=PA78, பார்த்த நாள்: 6 November 2011 Quote: "Although the Indian states were alternately requested or forced into union with either India or Pakistan, the real death of princely India came when the Twenty-sixth Amendment Act (1971) abolished the princes' titles, privileges, and privy purses." (page 78). 4. Carol Breckenridge (1995), Consuming modernity: public culture in a South Asian world, U of Minnesota Press, pp. 84–, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8166-2306-8, https://books.google.com/books?id=LN4MN35b-r4C&pg=PA84, பார்த்த நாள்: 6 November 2011 Quote: "The third stage in the political evolution of the princes from rulers to citizens occurred in 1971, when the constitution ceased to recognize them as princes and their privy purses, titles, and special privileges were abolished." (page 84). 5. Ramchandra Guha (5 August 2008), India After Gandhi: The History of the World's Largest Democracy, HarperCollins, pp. 441–, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-06-095858-9, https://books.google.com/books?id=2fvd-CaFdqYC&pg=PA441, பார்த்த நாள்: 6 November 2011 Quote: "Her success at the polls emboldened Mrs. Gandhi to act decisively against the princes. Through 1971, the two sides tried and failed to find a settlement. The princes were willing to forgo their privy purses, but hoped at least to save their titles. But with her overwhelming majority in Parliament, the prime minister had no need to compromise. On 2 December she introduced a bill to amend the constitution and abolish all princely privileges. It was passed in the Lok Sabha by 381 votes to six, and in the Rajya Sabha by 167 votes to seven. In her own speech, the prime minister invited 'the princes to join the elite of the modern age, the elite which earns respect by its talent, energy and contribution to human progress, all of which can only be done when we work together as equals without regarding anybody as of special status.' " (page 441). 6. . Quote: "The Indian princes survived the British Raj by only a few years. The Indian republic stripped them of their powers and then their titles." (page 10). 7. Merriam-Webster, Inc (1997), Merriam-Webster's geographical dictionary, Merriam-Webster, pp. 520–, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87779-546-9, https://books.google.com/books?id=Co_VIPIJerIC&pg=PA520, பார்த்த நாள்: 6 November 2011 Quote: "Indian States: "Various (formerly) semi-independent areas in India ruled by native princes .... Under British rule ... administered by residents assisted by political agents. Titles and remaining privileges of princes abolished by Indian government 1971." (page 520). 8. Ward, Philip (September 1989), Northern India, Rajasthan, Agra, Delhi: a travel guide, Pelican Publishing, pp. 91–, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-88289-753-0, https://books.google.com/books?id=KubCD2jHjEsC&pg=PA91, பார்த்த நாள்: 6 November 2011 Quote: "A monarchy is only as good as the reigning monarch: thus it is with the princely states. Once they seemed immutable, invincible. In 1971 they were "derecognized," their privileges, privy purses and titles all abolished at a stroke" (page 91)
  9. செல்வ புவியரசன் (2018 திசம்பர் 18). "ராகுலின் இரண்டு தளபதிகள்". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 19 திசம்பர் 2018.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.