ஜேம்ஸ் மில்
யேம்சு மில் (James Mill, பிறப்பு: ஜேம்சு மில்னி (James Milne,[1] 6 ஏப்ரல் 1773 – 23 சூன் 1836[2]) என்பவர் இசுக்கொட்லாந்தைச் சேர்ந்த வரலாற்றாளரும், பொருளியலாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் ரிக்கார்டியன் பொருளியல் பள்ளியின் நிறுவனர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகிறார்.[3] இவரது மகன் யோன் மில் ஒரு குறிப்பிடத்தக்க தாராளமய, பயனெறிமுறைக் கோட்பாட்டு மெய்யியலாளர் ஆவார்.
ஜேம்சு மில் | |
---|---|
![]() | |
முழுப் பெயர் | ஜேம்சு மில் |
பிறப்பு | ஜேம்ஸ் மில்னி[1] ஏப்ரல் 6, 1773 ஆங்கசு, இசுக்கொட்லாந்து |
இறப்பு | 23 சூன் 1836 63) கென்சிங்டன், இலண்டன் | (அகவை
காலம் | 19-ஆம் நூற்றாண்டு மெய்யியல் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஆரியட் பரோ |
சிந்தனை மரபுகள் | பயனெறிமுறைக் கோட்பாடு தாராளமயம் ரிக்கார்டியன் பொருளியல் |
முக்கிய ஆர்வங்கள் | உளவியல் நன்னெறி பொருளியல் |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
யேம்சு மில் இந்தியாவுக்கு எப்போதும் சென்றிருக்கவில்லை, ஆனாலும், 1818 ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் வரலாறு என்ற ஆவணத்தை எழுதி வெளியிட்டுப் பெரும் புகழ் தேடினார்.[4] இவரே முதன் முதலில் இந்திய வரலாற்றை இந்து, முசுலிம், பிரித்தானியா என மூன்று பகுதிகளாகப் பிரித்தார்.[2]
எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பயின்று அறிவொளி இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர் தாராளமனப் போக்குடையவராகவும், பயன்பாட்டுக் கோட்பாட்டளராகவும் திகழ்ந்தார். இந்தியாவின் தலைமை ஆளுநர் வில்லியம் பென்டிங்கு பிரபு கொண்டு வந்த 1833 பட்டயச் சட்டத்துக்கான ஆவணத்தை இவர் எழுதினார்.
குறிப்புகள்
- Ball, Terence (19 June 2014). "James Mill". Stanford Encyclopedia of Philosophy. Stanford University. அணுகப்பட்டது 4 April 2018.
- Chisholm 1911, பக். 453.
- John Maynard Keynes. "The General Theory". The General Theory of Employment, Interest and Money. http://www.marxists.org/reference/subject/economics/keynes/general-theory/ch01.htm. பார்த்த நாள்: 4 April 2018.
- Mill, James (1817), The History of British India (1 ), London: Baldwin, Cradock, and Joy, https://archive.org/stream/historyofbritish1817mill#page/n5/mode/2up, பார்த்த நாள்: 11 December 2012
மேற்கோள்கள்
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Mill, James". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 19. (1911). Cambridge University Press. 453–454.