ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு
ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி. | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() | |
வகை | இயற்கை |
ஒப்பளவு | vii |
உசாத்துணை | 637 |
UNESCO region | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1992 (16ஆவது தொடர்) |
ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு 九寨沟 | |
---|---|
ஐயுசிஎன் வகை III (இயற்கை நினைவகம்) | |
அமைவிடம் | சிச்சுவான், சீனா |
கிட்டிய நகரம் | சோங்பான் |
பரப்பளவு | 600 to 720 கிமீ |
நிறுவப்பட்டது | 1978 |
வருகையாளர்கள் | 1,190,000 (in 2002) |
நிருவாக அமைப்பு | கட்டுமானத்துக்கான சிச்சுவான் மாகாண ஆணையம் (Sichuan Provincial Commission for Construction) |
ஜியுசாய்கோ பள்ளத்தாக்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு இயற்கை காப்பகம் ஆகும். இது பல மட்டங்களில் அமைந்த அருவிகளுக்கும், பல நிறங்களிலான ஏரிகளுக்கும் பெயர் பெற்றது. 1992 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. காக்கப்பட்ட பகுதிகளுக்கான IUCN வகைப்பாட்டு முறைமையின்படி, இது வகை V (காக்கப்பட்ட நிலத்தோற்றம்) என்பதற்குள் அடங்கும்.
புவியியலும் காலநிலையும்
ஜியுசாய்கோ மின்ஷான் மலைத் தொடரின் தென் முனையில் மாகாணத் தலைநகரான செங்டுவுக்கு வடக்கே 330 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது முன்னர் நான்பிங் கவுண்டி என அழைக்கப்பட்ட ஜியுசாய்கோ கவுண்டியின் ஒரு பகுதியாகும். இவ்விடம் சிச்சுவான் மாகாணத்தில், அதன் கான்சு மாகாணத்துடனான எல்லைக்கு அருகிலுள்ள ஆபா திபேத்திய கியாங் தன்னாட்சி அதிகாரஎல்லைப் பகுதிக்கு உட்பட்டது.
இப்பள்ளத்தாக்கு குறைந்தது 240 சதுர கிலோமீட்டர் பரப்பளவைத் தன்னுள் அடக்கியுள்ளது. சில காப்பு நிறுவனங்கள், 400 - 600 சதுர கிமீ பரப்பளவுகொண்ட இடைநிலைப் பகுதிகளையும் உள்ளடக்கி, இதனை 600 - 700 சதுர கிமீ என்கின்றன. இப்பகுதியின் உயரம் ஷுசெங் நீர்வெளியேற்றப் பகுதிக்கு அண்மையில் 1,998 - 2,140 மீட்டர்கள் தொடக்கம் கான்சிகொங்காய் மலையில் உள்ள செச்சாவா நீர்வெளியேற்றப் பகுதியில் 4,558 - 4,764 மீட்டர்கள் வரை வேறுபடுகின்றது.
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புக்கள்
- யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களில் ஜியுசாய்கோ
- Jiuzhaigou at the யுனெஸ்கோவின் MAB உயிர்க்கோளக் காப்பகப் பகுதியில் (Biosphere Reserves) ஜியுசாய்கோ