ஜி. கே. வாசன்
ஜி. கே. வாசன் (பிறப்பு: டிசம்பர் 28, 1964) தமிழ்நாட்டு அரசியல்வாதி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றியவர். தற்போது தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் தலைவராக உள்ளார்.
ஜி. கே. வாசன் | |
---|---|
தமிழ் மாநில காங்கிரசு | |
தலைவர் | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | திசம்பர் 28, 1964 சுந்தரபெருமாள் கோவில்,தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு |
வாழ்க்கை துணைவர்(கள்) | சுனிதா |
பிள்ளைகள் | பிரனாவ் கருப்பையா |
இருப்பிடம் | சென்னை |
கல்வி | பி.ஏ. நிருவன செயலியல் |
இணையம் | www.gkvasan.net |
குடும்பம்
ஜி.கே.வாசன் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் ஜி. கே. மூப்பனார், தாயார் பெயர் கஸ்தூரி. சென்னை புதுக் கல்லூரியில் பி.ஏ. நிருவன செயலியல் பட்டம் பெற்றார். 29-11-1996 ல் சுனிதாவை திருமணம் புரிந்தார்.
காங்கிரஸ் கட்சியில்
தனது தந்தையின் மரணத்திற்கு பின் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பணியாற்றி பின்னர் அதனை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். பின்னர் தமிழக காங்கிரஸ்தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும், இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற்று ஒருமுறை மத்திய புள்ளிவிவரத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.சென்ற மத்திய கப்பல் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
புதியகட்சித் துவக்கம்
காங்கிரஸ் கட்சி 2014ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் காங்கிரஸ் தலைமையுடன் வாசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ஜி.கே. வாசன், 2014 நவம்பர் 28இல் தமிழ் மாநில காங்கிரசு என்ற கட்சியை மீண்டும் தொடங்கினார்.[1][2]
திருவையாறு தியாகபிரம்மா மகாஉத்சவ சபாவின் தலைவராகவும், அதன் நிர்வாக அறங்காவலராகவும் உள்ளார்.
குறிப்புகள்
- "த.மா.கா. தலைவராக ஜி.கே.வாசன் தேர்வு!". பார்த்த நாள் 20 மார்ச் 2016.