ஜார்ஜ் ஓம்

ஜார்ஜ் சைமன் ஓம் (Georg Simon Ohm, இடாய்ச்சு: [oːm]; மார்ச்சு 16, 1789 – சூலை 6, 1854) செருமானிய இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும்போது ஓம் இத்தாலிய இயற்பியலாளர் வோல்ட்டா கண்டுபிடித்த மின்வேதி கலத்தைக் கொண்டு தமது ஆய்வுகளைத் துவங்கினார். தாமே உருவாக்கிய கருவிகளைக் கொண்டு ஒரு கடத்தியின் இரு முனைகளுக்கு இடையேயான நிலை வேறுபாட்டிற்கும் (மின்னழுத்தம்) அதனால் ஏற்படும் மின்னோட்டத்திற்கும் நேரடித் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தார். இந்தத் தொடர்பை விவரிப்பதே ஓமின் விதி என அறியப்படுகிறது. அனைத்துலக அலகுகளில் மின்தடைக்கான அலகு இவரது பெயரைக் கொண்டு ஓம் (குறியீடு Ω) என வழங்கப்படுகிறது.

ஜார்ஜ் சைமன் ஓம்
பிறப்புமார்ச்சு 16, 1789(1789-03-16)
எர்லாங்கென், பிரான்டென்பர்கு-பேரெயத்
(தற்கால ஜெர்மனி)
இறப்பு6 சூலை 1854(1854-07-06) (அகவை 65)
மியூனிக், பவேரியா இராச்சியம்
வாழிடம்பிரான்டென்பர்கு-பேரெயத், பவேரியா
தேசியம்செருமானியர்
துறைஇயற்பியல் (மின்சாரம்)
பணியிடங்கள்மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்எர்லாங்கென் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்கார்ல் கிறிஸ்டியன் வொன் லாங்கஸ்டோர்ப்
அறியப்படுவதுஓமின் விதி
ஓமின் ஒலியியல் விதி
விருதுகள்கோப்லி பதக்கம் (1841)[1]

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.