ஓம் (மின்னியல்)
ஓம் (ஆங்கிலம்: Ohm) என்பது தடையை அளப்பதற்கான சர்வதேச அலகு ஆகும்.[1] இதனுடைய குறியீடு Ω ஆகும்.[2] இவ்வலகுக்கு சார்ச்சு சைமன் ஓம் என்ற செருமனிய இயற்பியல் வல்லுநரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[3]
![]() | |
அலகு முறைமை: | SI derived unit |
அலகு பயன்படும் இடம் | மின்தடை |
குறியீடு: | Ω |
பெயரிடப்பட்டது: | ஜார்ஜ் ஓம் |
In SI base units: | kg⋅m2⋅s-3⋅A-2 |

ஓமில் தடையை அளவிடுவதற்குப் பல்மானி பயன்படுத்தப்படுகின்றது. இவ்வுபகரணத்தின் மூலம் அழுத்த வேறுபாடு, மின்னோட்டம் என்பனவற்றையும் அளக்க முடியும்.
வரைவிலக்கணம்
கடத்தியொன்றில் இரு புள்ளிகளுக்கிடையிலான அழுத்த வேறுபாடு ஒரு வோல்ட்டு ஆகவும் அக்கடத்தியில் பாயும் மின்னோட்டத்தின் அளவு ஓர் அம்பியர் ஆகவும் இருப்பின், அக்கடத்தியின் தடை ஓர் ஓம் ஆகும்.[4]
இலத்திரனியல் ஆவணங்களில் Ω குறியீடு
இலத்திரனியல் ஆவணங்களில் (மீப்பாடக் குறிமொழி உள்ளடங்கலாக) Ω குறியீட்டினைப் பயன்படுத்தும்போது கவனமாக இருத்தல் அவசியமாகும். சில மென்பொருட்களில் எழுத்துரு ஆதரவு அளிக்காத நிலையில் Ω குறியீடானது, W என்ற குறியீட்டின் மூலம் காட்டப்படும். உதாரணமாக, 100 Ω தடையி என்பதற்குப் பதிலாக 100 W தடையி என்று காட்டப்படும்.
ஒருங்குறியில் Ω குறியீட்டிற்கு U+2126 என்ற இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.[6]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.