ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 (Jammu and Kashmir Reorganisation Bill, 2019), இந்தியாவின், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைக்க வகை செய்யும் சட்ட முன்வடிவத்தை, இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா 5 ஆகத்து, 2019 (திங்கட்கிழமை) அன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைத்தார்.[1][2]
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 | |
---|---|
An Act to provide for the reorganisation of the existing State of Jammu and Kashmir and for matters connected therewith or incidental thereto. | |
சான்று | Act No. 34 of 2019 |
இயற்றியது | மாநிலங்களவை |
இயற்றியது | மக்களவை |
சம்மதிக்கப்பட்ட தேதி | ஆகத்து 9, 2019 |
கையொப்பமிடப்பட்ட தேதி | ஆகத்து 9, 2019 |
அறிமுகப்படுத்தியது | அமித் சா உள்துறை அமைச்சர் |
சட்ட முன்வடிவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதிகளை வழங்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு, 370 மற்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 35-எ நீக்கம் செய்யவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, சட்டமன்றம் கொண்ட ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியாகவும் மற்றும் லடாக் லடாக் ஒன்றியப் பகுதியாகவும் பிரிக்க வகை செய்கிறது.[3]
குடியரசுத் தலைவரின் ஆணை
இச்சட்ட முன்வடிவம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைப்பதற்கு முன்னர், இந்தியக் குடியரசுத் தலைவர், அரசியல் அமைப்புச் சட்டம் 370 (3)-இன் கீழ்[4], 5 ஆகத்து 2019 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதிகள் வழங்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் சட்டப் பிரிவு 35ஏ ஆகியவைகளை நீக்கி ஆணையிட்டுள்ளார்.[5][6]
மாநிலங்களவையின் தீர்மானித்திற்கு விடப்பட்ட சட்ட முன்வடிவங்கள்
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புத் தரும் சிறப்புத் தகுதிகளை நீக்குவதற்கான கீழ்கண்ட நான்கு சட்ட முன்வடிவங்களையும் மாநிலங்களவையின் தீர்மானத்திற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா சமர்ப்பித்துள்ளார். அவைகள்:
- இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு, 370 நீக்கும் சட்ட மசோதா.
- ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ யை நீக்குவதற்கான மசோதா.
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாற்றுவதற்கான மசோதா.
- ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து சட்டமன்றம் கொண்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும் மற்றும் சட்டமன்றம் இல்லாத லடாக் யூனியன் பிரதேசமாகவும் மறுசீரமைப்பதற்கான மசோதா.[7]
மாநிலங்களவையில் ஆதரவும், எதிர்ப்பும்
இச்சட்ட முன்வடிவத்திற்கும், குடியரசுத் தலைவரின் ஆணைக்கும் ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி, அகாலி தளம், ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பிஜு ஜனதா தளம், சிவ சேனா, அதிமுக, ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி போன்ற அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவு அளித்து மாநிலங்களவையில் பேசினர். ஆனால் இந்திய தேசிய காங்கிரசு, தேசியவாத காங்கிரசு கட்சி, திமுக, சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா கட்சி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்), இந்தியப் பொதுவுடமைக் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் இச்சட்ட முன்வடிவத்தை கடுமையாக எதிர்த்துப் பேசினர்.[8] இறுதியாக நடைபெற்ற வாக்கெடுப்பில் அரசின் வரைவுச்சட்டத் தீர்மானத்திற்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 61 வாக்குகளும் பெற்று அரசின் தீர்மானம் நிறைவேறியது.[9] சட்டவரைவுக்கான வாக்கெடுப்பில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் தங்களது எதிர்ப்பை தெரிவித்து விட்டு, அவையை விட்டு வெளியேறினார்கள்.[10]
மக்களவையில் ஆதரவும், எதிர்ப்பும்
2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட முன்வடிவ தீர்மானத்தை மக்களவையில் 6 ஆகத்து 2019 அன்று உள்துறை அமைச்சர் அமித் சா அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். இத்தீர்மானத்தை மாலை 7 மணி அளவில் இந்திய மக்களவை உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 367 வாக்குகளும், எதிராக 67 வாக்குகளும் பெற்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.[11][12] [13]
மாநிலங்களவை மற்றும் மக்களவையில், 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட முன்வடிவம் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதால், இதனை இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு முழுமையான சட்ட வடிவம் பெறும்.
சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும், அரசிதழில் வெளியீடும்
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதிகளை நீக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் 7 ஆகத்து 2019 அன்று ஒப்புதல் வழங்கியதால் சட்டமாக உருப்பெற்றது. 9 ஆகத்து 2019 அன்று ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019, 31 அக்டோபர் 2019 முதல் நடைமுறைக்கு வரும் என இந்திய அரசின் அரசிதழில் குடியரசுத் தலைவரின் அறிவிக்கை வெளியிடப்பட்டது.[14][15][16]
ஜம்மு காஷ்மீர் & லடாக் ஒன்றியப் பகுதிகளின் துவக்கம்
.svg.png)
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31 அன்று ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவைகள் தனித்தனி ஒன்றியப் பகுதிகளாக செயல்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.[17][18]
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு தகுதி நீக்கம் குறித்த இந்தியக் குடியரசுத் தலைவரின் உத்தரவை எதிர்த்து 10 ஆகத்து 2019-இல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வழக்கு தொடர்ந்து உள்ளது.[19] [20]
இதனையும் காண்க
- ஜம்மு காஷ்மீர் வரலாறு
- ஜம்மு காஷ்மீர் இராச்சியம்
- ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம்
- காஷ்மீர் பிரச்சினை
- ஜம்மு காஷ்மீர்
- ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)
- இந்திய-பாகிஸ்தான் போர், 1947
- இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370
- இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370 (3)
- இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ
மேற்கோள்கள்
- ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட முன்வடிவம் 2019 - கோப்பு ஆவணம்
- "Govt introduces J&K Reorganisation Bill 2019 in Rajya Sabha; moves resolution revoking Article 370".
- "Full state status will be restored to J&K at appropriate time: Amit Shah in RS".
- Article 370(3) in The Constitution Of India 1949
- One Constitution for India and J&K: Read Presidential Declaration under Article 370(3) that ceases Article 370
- President’s Order scraps its predecessor and amends Article 370
- மாநில அந்தஸ்தை இழந்து இரண்டாக பிரிகிறது ஜம்மு காஷ்மீர்: அமித் ஷா அறிவிப்பின் சாராம்சம்
- J&K Crisis Live Updates: Pakistan says it'll exercise all options to counter India's move on Kashmir
- காஷ்மீர் சர்ச்சை: காஷ்மீரை பிரிக்கும் மசோதா மாநிலங்களவை நிறைவேறியது
- காஷ்மீர் மசோதா: வாக்கெடுப்பை புறக்கணித்தது ஏன்? - மம்தா பானர்ஜி விளக்கம்
- காஷ்மீர் மசோதா: இரண்டாக பிரிகிறது காஷ்மீர் மாநிலம்: மக்களவையிலும் நிறைவேறியது
- ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேறியது
- Desk, The Hindu Net (2019-08-06). "Parliament Live | Lok Sabha passes Jammu and Kashmir Reorganisation Bill, Ayes: 370, Noes 70" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/parliament-live-govt-to-move-jammu-and-kashmir-reorganisation-bill-for-passage-in-lok-sabha/article28831274.ece.
- The Gazette of India
- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: குடியரசுத் தலைவர் ஒப்புதல்; அரசிதழில் வெளியீடு
- ஜம்மு- காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் அமலுக்கு வந்தது : ஜனாதிபதி ஒப்புதல்
- அக்டோபர் 31 முதல் யூனியன் பிரதேசங்களாக மாறுகிறது ஜம்மு-காஷ்மீர், லடாக்
- அக்டோபர் 31 முதல் ஜம்மு காஷ்மீர் & லடாக் தனி தனி யூனியன் பிரதேசங்களாக செயல்படும் - காணொளி
- ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஜனாதிபதி உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
- ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு - ஜனாதிபதி உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
வெளி இணைப்புகள்
- Jammu and Kashmir Live updates: Centre makes Article 370 toothless, Article 35(A) ceases to exist
- காஷ்மீர் சர்ச்சை: ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரிக்க மசோதா, சிறப்புரிமைகளை ரத்து செய்ய குடியரசுத் தலைவர் ஆணை
- Article 370 on Jammu and Kashmir's special status revoked, announces Amit Shaha
- பிரதமர் மோடியின் 'மிஷன் காஷ்மீர்': மிகவும் ரகசியமான பணியை அமித் ஷா கச்சிதமாக முடித்தது எப்படி?
- அம்பேத்கர் வரவேற்பார்!
- இனிமேல் காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினையாக இருக்காது: நாடாளுமன்றத்தில் வைகோ ஆவேசம்