சோமசுந்தரப் புலவர்

சோமசுந்தரப் புலவர் (மே 25, 1878சூலை 10, 1953) தங்கத் தாத்தா என அன்பாக அழைக்கப்பட்டவர். ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள்களை இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை போன்ற பல செய்யுள்களை சுவையான முறையில் எளிய தமிழில் பாடியுள்ளார். பலவகைப் பக்திப் பாடல்களையும் அவர் இயற்றியிருக்கின்றார். பனையின் பெருமைகளைக் கூறும் தாலவிலாசம், கதிர்காமம் முருகக் கடவுளைக் குறித்து பாடிய கதிரைச் சிலேடை வெண்பா புகழ் பெற்றவை.[1]

சோமசுந்தரப் புலவர்
நவாலியூர் சோமசுந்தரப் புலவர்
பிறப்புமே 25, 1878(1878-05-25)
நவாலி, யாழ்ப்பாணம்
இறப்புசூலை 10, 1953(1953-07-10) (அகவை 75)
நவாலி
மற்ற பெயர்கள்தங்கத் தாத்தா
சமயம்சைவ சமயம்
பெற்றோர்இலக்குமிப்பிள்ளை
அருமையினார் கதிர்காமர்
வாழ்க்கைத்
துணை
சின்னம்மை வேலுப்பிள்ளை
பிள்ளைகள்சோ. இளமுருகனார்
சோ. நடராசன்
வேலாயுதபிள்ளை மங்கையற்கரசி
சரசுவதி

வாழ்க்கைச் சுருக்கம்

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றைச் சேர்ந்த நவாலியூர் என்னும் சிற்றூரில் வன்னியசேகர முதலியார் வழித்தோன்றலாய் அருமையினார் கதிர்காமர், இலக்குமிப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தவர் சோமசுந்தரர். க. வேலுப்பிள்ளை இவருக்கு உடன்பிறந்தவர். 28வது வயதில் சங்குவேலியைச் சேர்ந்த புலவரின் தாய்மாமனார் வேலுப்பிள்ளை என்பவரின் புதல்வி சின்னம்மையைத் திருமணம் புரிந்தார். அவர்களுக்கு இளமுருகனார், நடராசன் வேலாயுதபிள்ளை மங்கையற்கரசி, சரசுவதி என ஐந்து பிள்ளைகள்.

செய்யுள் இயற்றல்

நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடம் தமிழ், இலக்கண இலக்கியங்களையும் தனது உறவினரான இராமலிங்க உபாத்தியாயரிடம் ஆங்கிலத்தையும் கற்றார். சிறு வயதிலேயே பேச்சாற்றலையும் விவாதத்திறமையும் பெற்றார். தனது இளமைப் பருவத்திலேயே அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருவூஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை போன்ற நூல்களை இயற்றினார்.

இயற்றிய பிரபந்தங்கள்

பதிகம், ஊஞ்சல் என்றும் இரண்டு பிரபந்தங்களையும் பாடிய சோமசுந்தரப் புலவர் கலம்பகம், நான்மணி மாலை, அட்டகம், அந்தாதி, சிலேடை வெண்பா, திருப்பள்ளியெழுச்சி ஆகிய பிரபந்தங்களையும் பாடினார்.

சைவத் தலங்களை மையமாக அட்டகிமுக் கலம்பகம், தில்லை அந்தாதி, கதிரைச் சிலேடை வெண்பா போன்ற பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.

நானூற்றுக்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் அமைந்த தாலவிலாசம் என்ற இவரது செய்யுள் நூல் பனையின் பெருமைகளைக் கூறுகிறது.

இயற்றிய நாடகங்கள்

  • உயிரிளங்குமரன்

வேறு நூல்கள்

  • கந்தபுராணக் கதைகளும் அவை உணர்த்தும் உண்மைநூற் கருத்தும்
  • கந்தவனக் கடவை நான்மணிமாலை
  • சாவித்திரி கதை ( உரைநடை நூல் )
  • கந்தபுராண நுண்பொருள் விளக்கம் ( சைவாங்கில வித்தியாசாலை வெளியீடு )
  • தந்தையார் பதிற்றுப்பத்து
  • நல்லை முருகன் திருப்புகழ்
  • நல்லையந்தாதி
  • அருணாசலந்துரை சரித்திரச் சுருக்கம்
  • சுகாதாரக் கும்மி ( சைவபரிபாலன சபையார் பதிப்பு )
  • சூரியவழிபாடு
  • மருதடி விநாயகர் பாமாலை
  • கந்தவனநாதர் திருப்பள்ளியெழுச்சி
  • அட்டகிரிப் பதிகம்
  • கல்லுண்டாய் வைரவர் பதிகம்
  • கதிரைமலை வேலவர் பதிகம்
  • செந்தமிழ்ச் செல்வியாற்றுப்படை
  • சிறுவர் பாடல்கள்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. சோமசுந்தர புலவர்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.