சோ. கிருஷ்ணராஜா

பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா (பெப்ரவரி 2, 1947 - மே 29, 2009) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் பேராசிரியர். அறிவாராய்ச்சியியல், அளவையியல், ஒழுக்கவியல், மாக்சியம், அழகியல், விஞ்ஞான முறையியல், உளவியல் சைவசித்தாந்தம், கலை, பண்பாடு, சமூகவியல், மொழியியல் ஆகிய துறைகள் தொடர்பாக பல நூல்களையும் உருவாக்கினார்.

சோ. கிருஷ்ணராஜா
பிறப்பு(பெப்ரவரி 2, 1947
உரும்பிராய், யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புமே 29, 2009(2009-05-29) (அகவை 62)
கொழும்பு, இலங்கை
இருப்பிடம்சுதுமலை, யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கையர்
கல்விPhD (மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்)
BA (பேராதனைப் பல்கலைக்கழகம்)
பணிமெய்யியல் பேராசிரியர்
பணியகம்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
சமயம்இந்து
பெற்றோர்சோமசுந்தரம், நல்லம்மா

வாழ்க்கை குறிப்பு

கிருஷ்ணராஜா யாழ்ப்பாண மாவட்டம் உரும்பிராயில் சோமசுந்தரம், நல்லம்மா தம்பதியினருக்கு பிறந்தார். மகாஜனா கல்லூரியில் பள்ளிப்படிப்பையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார். பின்னர் சோவியத் ஒன்றியத்தில், மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் (Moscow State University) மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்று இலங்கை திரும்பி யாழ் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் விரிவுரையாளராக இணைந்து பின்னர் மெய்யியல் துறையின் தலைவரானார்.

எழுதிய நூல்கள்

  1. அழகியல் (1996, மறுபதிப்பு 2008),
  2. விமர்சன மெய்யியல், (1989)
  3. விமர்சன முறையியல், (1992)
  4. 20 ஆம் நூற்றாண்டு ஓவியக் கொள்கை, (1994)
  5. சைவசித்தாந்த அறிவாராய்ச்சியியல், (1995)
  6. சைவ சித்தாந்தம் மறு பார்வை, (1998)
  7. பின் நவீனத்துவம் ஓர் அறிமுகம், (1999)
  8. இந்துக் கலைக் கொள்கை ,(2004)
  9. சங்ககாலச் சமூகமும் சமயமெய்யியல் சிந்தனைகளும் (2007)

அவரால் எழுதப்பட்ட அவரின் காலத்தில் நூலுருப் பெறாத பின்வரும் மூன்று நூல்கள் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களால் நூலுருப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  1. மெய்யியலாளன் நோக்கில் பண்பாடு
  2. ஐரோப்பிய மெய்யியல் வரலாறு
  3. மெய்யியல் பிரச்சினைகள் ஓர் அறிமுகம்

பதிப்பித்த நூல்கள்

  1. தர்க்க பானஹ (1988)
  2. தர்க்க கௌமுதி (1990)
  3. இந்திய மெய்யியல் (கிரியண்ணாவினால் எழுதப்பெற்றது)
  4. சிவஞானபோத வசனாலங்காரதீபம் (2003)

இவற்றை விட ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்து சமய கலாசார அமைச்சினால் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்துக் கலைக் களஞ்சியத்தின் உருவாக்கத்திற்கு மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கியிருக்கிறார்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.