சைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்

சைவத் திருமுறைகளான பன்னிரண்டு திருமுறைகளிலும் பலவிதமான இசைக்கருவிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த இசைக் கருவிகள் பழந்தமிழர் இசைக்கருவிகளாகும். இவற்றில் பல இசைக்கருவிகள் கோவில்களிலும், அருங்காட்சியகத்திலும் மட்டுமே உள்ளன.

திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகளின் பட்டியல்

இசைக்கருவிகள்திருமுறைப் பாடல்கள்
ஆகுளிவெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்

கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்

சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி

கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும் 12.0654

இடக்கைகத்திரிகை துத்திரிக றங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்

எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச

ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்

மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே. 3.76.5

இலயம்கூடிய இலயம் சதிபிழை யாமைக்

கொடியிடை உமையவள் காண

ஆடிய அழகா அருமறைப் பொருளே

அங்கணா எங்குற்றா யென்று

தேடிய வானோர் சேர்திரு முல்லை

வாயிலாய் திருப்புகழ் விருப்பால்

பாடிய அடியேன் படுதுயர் களையாய்

பாசுப தாபரஞ் சுடரே. 7.69.2

உடுக்கைஉண்டுடுக்கை யின்றியேநின் றூர்நகவேதிரிவார்

கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாதவிடந்

தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார்

பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே. 1.65.10

ஏழில்காத லாலே கருதுந் தொண்டர் கார ணத்தீ ராகி நின்றே

பூதம் பாடப் புரிந்து நட்டம் புவனி யேத்த ஆட வல்லீர்

நீதி யாக ஏழி லோசை நித்த ராகிச் சித்தர் சூழ

வேத மோதித் திரிவ தென்னே வேலை சூழ்வெண் காட னீரே. 7.6.07

கத்திரிகைகத்திரிகை துத்திரிக றங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்

எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச

ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்

மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே. 3.76.5

கண்டைசங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி

வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி

பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின்

மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க 12.581

கரதாளம்விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்

அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும்

சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்

கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத்

தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை

கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்

குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்

இடமாந் தடாரி படகம் - இடவிய

மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்

எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே

மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்

கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300

கல்லலகுவிச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்

அச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும்

சல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்

கல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத்

தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை

கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்

குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்

இடமாந் தடாரி படகம் - இடவிய

மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்

எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே

மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்

கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300

கல்லவடம்கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங்

கல்ல வடத்தை யுகப்பார் காழியார்

அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம்

பல்ல விடத்தும் பயிலும் பரமரே. 1.24.7

கவிழ்பாடும் பறண்டையு மாந்தையு மார்ப்பப் பரந்துபல்பேய்க்

கூடி முழவக் குவிகவிழ் கொட்டக் குறுநரிகள்

நீடுங் குழல்செய்ய வையம் நெளிய நிணப்பிணக்காட்

டாடுந் திருவடி காண்கஐ யாறன் அடித்தலமே. 4.92.9


நத்தார்புடை ஞானம்பசு ஏறிந்நனை கவிழ்வாய்

மத்தம்மத யானைஉரி போர்த்தமழு வாளன்

பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேற்

செத்தாரெலும் பணிவான்றிருக் கேதீச்சரத் தானே. 7.80.1

கழல்கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்

குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர்

விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும்

முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே. 1.2.6

காளம்சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி

வெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி

பொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின்

மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க 12.581

கிணைதக்கைதண்ணுமை தாளம்வீணை தகுணிச்சங்கிணை சல்லரி

கொக்கரைகுட முழவினோடிசை கூடிப்பாடிநின் றாடுவீர்

பக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ் ஞீலியேனென நிற்றிரால்

அக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும் ஆரணீய விடங்கரே. 7.36.9

கிண்கிணிவரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்

கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்

சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங்

கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே. 1.61.3

கிளைபரசும் கருணைப் பெரியோன் அருளப் பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து

அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடை சூழ் அதிகைப் பதி தான்

முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன்

நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே 12.1341

கின்னரம்தளருங் கோளர வத்தொடு தண்மதி வளருங் கோல வளர்சடை யார்க்கிடம் கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக் களருங் கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே (தேவாரம், ஐந்தாம் திருமுறை, 19வது பாடல்)
குடமுழாஎடுத்துக்காட்டு
குழல்எடுத்துக்காட்டு
கையலகுஎடுத்துக்காட்டு
கொக்கரைஎடுத்துக்காட்டு
கொடுகொட்டிஎடுத்துக்காட்டு
கொட்டுஎடுத்துக்காட்டு
கொம்புஎடுத்துக்காட்டு
சங்குஎடுத்துக்காட்டு
சச்சரிஎடுத்துக்காட்டு
சலஞ்சலம்எடுத்துக்காட்டு
சல்லரிஎடுத்துக்காட்டு
சிலம்புஎடுத்துக்காட்டு
தகுணிச்சம்எடுத்துக்காட்டு
தக்கைஎடுத்துக்காட்டு
தடாரிஎடுத்துக்காட்டு
தட்டழிஎடுத்துக்காட்டு
தத்தளகம்எடுத்துக்காட்டு
தண்டுஎடுத்துக்காட்டு
தண்ணுமைஎடுத்துக்காட்டு
தமருகம்எடுத்துக்காட்டு
தாரைஎடுத்துக்காட்டு
தாளம்எடுத்துக்காட்டு
துத்திரிஎடுத்துக்காட்டு
துந்துபிஎடுத்துக்காட்டு
துடிஎடுத்துக்காட்டு
தூரியம்எடுத்துக்காட்டு
திமிலைஎடுத்துக்காட்டு
தொண்டகம்எடுத்துக்காட்டு
நரல் சுரிசங்குஎடுத்துக்காட்டு
படகம்எடுத்துக்காட்டு
படுதம்எடுத்துக்காட்டு
பணிலம்எடுத்துக்காட்டு
பம்பைஎடுத்துக்காட்டு
பல்லியம்எடுத்துக்காட்டு
பறண்டைஎடுத்துக்காட்டு
பறைஎடுத்துக்காட்டு
பாணிஎடுத்துக்காட்டு
பாண்டில்எடுத்துக்காட்டு
பிடவம்எடுத்துக்காட்டு
பேரிகைஎடுத்துக்காட்டு
மத்தளம்எடுத்துக்காட்டு
மணிஎடுத்துக்காட்டு
மருவம்எடுத்துக்காட்டு
முரசுஎடுத்துக்காட்டு
முரவம்எடுத்துக்காட்டு
முருகியம்எடுத்துக்காட்டு
முருடுஎடுத்துக்காட்டு
முழவுஎடுத்துக்காட்டு
மொந்தைஎடுத்துக்காட்டு
யாழ்எடுத்துக்காட்டு
வட்டணைஎடுத்துக்காட்டு
வீணைஎடுத்துக்காட்டு
வீளைஎடுத்துக்காட்டு
வெங்குரல்எடுத்துக்காட்டு

[1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. [திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள் சைவம்.ஆர்க்]
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.