சங்கு

சங்கு (Conch, /ˈkɒn/ / /ˈkɒŋk/)[1] என்பது நடுத்தரம் முதல் பெரியளவு வரையான கடல் நத்தைகளுக்கு அல்லது அவற்றின் ஓடுகளுக்கு உள்ள பெயராகும். சங்கு எனும் பெயர் பொதுவாக பெரிய, சுருள் அமைப்புள்ள, தூம்புக் குழாய் வழியுள்ள நத்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

வளர்ந்த அரசிச் சங்கு ஒன்றின் துளைப்பக்கம், இடம் - டிரினிடாட் மற்றும் டொபாகோ

சங்குகள் எனப்படும் குழுக்கள் கடல்வாழ் குடற்காலி மெல்லுடலிகள் ஸ்ரோம்பியாடே குடும்பத்தைச் சேர்ந்தவை.

வேறுபல இனங்களும் சங்கு என்றே அழைக்கப்படுகின்றன. பொதுவாக சங்கு என அழைக்கப்படும் இனங்களாக, தெய்வீகச் சங்கு அல்லது இன்னும் தெளிவாக ஊதப் பயன்படும் சங்கின் ஓடு (வெண் சங்கு) உட்பட டேபினெலே இனங் சங்குகள் காணப்படுகின்றன.

நம் நாட்டுச் சங்கை வலம்புரிச்சங்கு, இடம்புரிசங்கு, சலஞ்சலம் பாஞ்க சன்னியம் எனப் பலவகையாகப் பிரித்துள்ளர். வலம்புரிச் சங்கு அரிதானது. ஆயினும் சலஞ்கலம், பாஞ்ச சன்னியம் ஆகிய இவ்விரண்டும் மிகமிக அபூர்வமானது. பொதுவாக சங்கில் 80 திற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. போர் சங்கு, ஊது சங்கு, பால் சங்கு, இளஞ்சிவப்பு சங்கு, கீற்றுச்சங்கு, சிலந்தி சங்கு எனப் பலவகையுன்டு. ஓரோட்டு உடலியம் கொண்ட சங்குகள் பசிப்பெருங்கடலில் அதிகம் கிடைக்கின்றன. இதில் கைவினைப்பொருட்கள் சங்குமாலைகள் போன்றவை செய்யப்படுகின்றன.[2]


மேலும் படிக்க

உசாத்துணை

மேற்கோள்கள்

  1. § 51. conch.no 7. Pronunciation Challenges. The American Heritage Book of English Usage. 1996
  2. அறிவுப் பேழை கவிஞா் நஞ்சுண்டன் முதற்பதிப்பு ஜுலை 1999 கலா பதிப்பபகம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.