செளந்தர்யா ரஜினிகாந்த்
செளந்தர்யா ரஜினிகாந்த் (இயற்பெயர்: சக்கு பாய் ராவ் கெய்க்வாட். பிறப்பு: 20 செப்டம்பர் 1984) [3][4] முதன்மையாக தமிழ் சினிமாவில் பணியாற்றும் வரைகலை வடிவமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் ஆக்கர் பிக்சர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உரிமையாளர் ஆவார். ஒரு வரைகலை வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய செளந்தர்யா, அவரது தந்தை ரஜினிகாந்த் நடித்த படங்களில் தலைப்புக் காட்சிகளை வடிவமைக்கத் தொடங்கினார். அவர் கோவா திரைப்படத்தின் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார். ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தில் ஒரு இயக்குனராக அறிமுகமானார்.
சௌந்தர்யா அஸ்வின் | |
---|---|
பிறப்பு | சக்கு பாய் ராவ் கெய்க்வாட் செப்டம்பர் 20, 1984 சென்னை, தமிழ்நாடு, இந்தியா[1] |
மற்ற பெயர்கள் | சௌந்தர்யா ரஜினிகாந்த் |
பணி | கணினி வரைகலைஞர், தயாரிப்பாளர், இயக்குனர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2002 முதல் தற்போது வரை |
பெற்றோர் | ரஜினிகாந்த் லதா ரஜினிகாந்த் |
வாழ்க்கைத் துணை | அஸ்வின் ராம்குமார் (2010-2017[2] விசாகன் வணங்காமுடி (திருமணம்: 2019) ) |
திரைப்படங்கள்
வரைகலை வடிவமைப்பு
வருடம் | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
1999 | படையப்பா | தலைப்பு மட்டும் |
2002 | பாபா | தலைப்பு மட்டும் |
2005 | அன்பே ஆருயிரே | |
மஜா | ||
சண்டக்கோழி | ||
சந்திரமுகி | தலைப்பு மட்டும் | |
2006 | சிவகாசி | |
2007 | சென்னை 600028 | |
சிவாஜி | தலைப்பு மட்டும் | |
2014 | கோச்சடையான் | இயக்கமும் |
தயாரிப்பு
வருடம் | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
2010 | கோவா |
இயக்கம்
வருடம் | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
2014 | கோச்சடையான்' | வரைகலை வடிவமைப்பாளராகவும் |
மேற்கோள்கள்
- "My mom is the boss: Soundarya Rajnikanth Ashwin". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 செப்டம்பர் 2013. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Soundarya-Rajnikanth-Ashwin-28-would-have-loved-to-be-called-by-her-original-name-Shaku-Bai-Rao-Gaikwad-Rajinikanths-original-name-was-Shivaji-Rao-Gaikwad-She-has-always-been-clear-about-what-she-wanted-to-do-and-chose-directing-over-acting-and-animation-over-everything-else-Being-the-younger-daughter-she-knows-she-is-naughty-and-the-biggest-fan-of-her-superstar-father-Rajinikanth-/articleshow/22484230.cms?intenttarget=no. பார்த்த நாள்: 4 மார்ச் 2014.
- Goyal, Divya (July 5, 2017). "Soundarya Rajinikanth And Ashwin Are Officially Divorced". என்டிடிவி. http://www.ndtv.com/india-news/soundarya-rajinikanth-and-ashwin-are-officially-divorced-1720635.
- குப்தா, பிரியா (12 செப்டம்பர் 2013). "My mom is the boss: Soundarya Rajnikanth". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/My-mom-is-the-boss-Soundarya-Rajnikanth/articleshow/22487545.cms. பார்த்த நாள்: 12 September 2013.
- "Rajinikanth wore a traditional marathi turban during his daughter's marriage". Dnaindia.com. பார்த்த நாள் 2013-09-12.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.