க. குணராசா

செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 - 28 பெப்ரவரி 2016) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.நீலவண்ணன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் வரைந்தார்.

செங்கை ஆழியான்
பிறப்புக. குணராசா
சனவரி 25, 1941(1941-01-25)
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
இறப்புபெப்ரவரி 28, 2016(2016-02-28) (அகவை 75)
நீராவியடி, யாழ்ப்பாணம்
இறப்பிற்கான
காரணம்
இயற்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
மற்ற பெயர்கள்சென்கை ஆழியான்
கல்வியாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழககம்
பணிஉதவி அரச அதிபர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
சமயம்இந்து
பெற்றோர்கந்தையா, அன்னம்மா
வாழ்க்கைத்
துணை
கமலாம்பிகை
பிள்ளைகள்ரேணுகா, பிரியா, ஹம்சா

பிறப்பும் கல்வியும்

இவர் கந்தையா அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது குழந்தையாக வண்ணார்பண்ணையில் பிறந்தார். யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். இவர் 28.02.2016 இல் தனது 75 வது வயதில் இயற்கையெய்தினார்

இவருடைய ஆக்கங்கள்

தொடர் கதை

ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த 'கிடுகு வேலி' என்ற இவரது தொடர்கதை வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

திரைப்படம்

இவர் எழுதிய 'வாடைக் காற்று' புதினம் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, தரமான படைப்பு எனப் பேசப்பட்டது.

புதினங்கள் மற்றும் குறும் புதினங்கள்

  • நந்திக்கடல்
  • சித்திரா பௌர்ணமி
  • ஆச்சி பயணம் போகிறாள்
  • முற்றத்து ஒற்றைப் பனை
  • வாடைக்காற்று
  • காட்டாறு
  • இரவின் முடிவு
  • ஜன்ம பூமி
  • கந்தவேள் கோட்டம்
  • கடற்கோட்டை

சிறுவர் புதினங்கள்

  • பூதத்தீவுப் புதிர்கள்
  • ஆறுகால்மடம்

வரலாற்று நூல்கள்

ஆய்வு நூல்கள்

  • ஈழத்துச் சிறுகதை வரலாறு

தொகுப்புக்கள்

  • மல்லிகைச் சிறுகதைகள் - 1
  • மல்லிகைச் சிறுகதைகள் - 2
  • சுதந்திரன் சிறுகதைகள்
  • மறுமலர்ச்சிச் சிறுகதைகள்
  • ஈழகேசரிச் சிறுகதைகள்
  • முனியப்பதாசன் கதைகள்
  • ஆயிரமாயிரம் ஆண்டுகள்

புவியியல்

  • அடிப்படைப் புவியியல் உலகம் இலங்கை
  • இலங்கைப் புவியியல்

பிற

  • நல்லை நகர் நூல்
  • ஈழத்தவர் வரலாறு

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.