செ. காந்திச்செல்வன்

செ. காந்திச்செல்வன் (S. Gandhiselvan) இந்திய அரசியல்வாதி. இவர் திமுக கட்சியை சேர்ந்தவர். நாமக்கல் நகராட்சி தலைவராகப் பணியாற்றியுள்ளார். இவர் தலைவராக இருந்த போது தான் நாமக்கல் நகராட்சி ஐஎசுஔ சான்றிதழை பெற்றது. 15வது மக்களவைக்கு [1]

செல்லப்பன் நாச்சம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர். இவருக்கு உடன் பிறந்த சகோதரர்கள் உண்டு. இவரது மனைவி பெயர் வசந்தி.[2] நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டமும் அண்ணாமலை பல்கழைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றார்.

2001ஆம் ஆண்டு கபிலர்மலை சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிட்டுத் தோல்வியுற்றார். 2006ஆம் ஆண்டு திருச்செங்கோடு சட்டமன்றத்துக்குத் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2009ஆம் ஆண்டு நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 2009ஆம் ஆண்டு வெற்றி பெற்று[3] ஒன்றிய துணை குடும்ப நலத் துறை அமைச்சராக 2009 முதல் 2013 வரை பணியாற்றியுள்ளார். 2014ஆம் ஆண்டு நாமக்கல் மக்களவைத் தொகுதியில் தோல்வியுற்றார். 15 ஆண்டுகள் நாமக்கல் மாவட்ட திமுக செயலாளராக இருந்தார்.[4]

மேற்கோள்கள்

  1. http://www.archive.india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=4540
  2. https://nocorruption.in/mps/s-gandhiselvan/
  3. "Statistical Reports of Lok Sabha Elections". Election Commission of India. பார்த்த நாள் 17 September 2011.
  4. "தமிழகம் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் நீக்கம் ஏன்?". தமிழ் இந்து. பார்த்த நாள் பெப்ரவரி 16, 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.