சுலு கடல்
சுலு கடல் (Sulu Sea) பிலிப்பீன்சின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நீர்ப்பகுதி ஆகும். இது வடமேற்கில் தென்சீனக் கடலிலிருந்து பலவானாலும் தென்கிழக்கில் செலேபெஸ் கடலிலிருந்து சுலு தீவுக்கூட்டங்களாலும் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தென்மேற்கில் போர்னியோவும் வடகிழக்கில் விசயன் தீவுகளும் உள்ளன.

சுலுக் கடலில் உள்ளலைகள் உருவாவதைக் காட்டும் நாசாவின் செய்மதிப் படிமம்

சுலு கடலின் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம்
சுலு கடலில் பல தீவுகள் உள்ளன. பலவான் மாநிலத்தின் குயோ தீவுகளும் ககயான் தீவுகளும் டாவி-டாவி மாநிலத்தின் மாபுன், டர்ட்டில் தீவுகளும் இவற்றில் அடங்கும். உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றான துப்பாதகா ஆழிப்பாறை தேசிய கடல்சார் பூங்கா சுலு கடலில் அமைந்துள்ளது.[1]
மேற்சான்றுகள்
- C.Michael Hogan. 2011. Sulu Sea. Encyclopedia of Earth. Eds. P.Saundry & C.J.Cleveland. Washington DC
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.