சுலாவெசி கடல்
சுலாவெசி கடல் (இந்தோனேசிய மொழி: லாவுத் சுலாவெசி) (en:Celebes Sea) மேற்கு பசிபிக் பெருங்கடலில், தெற்கில் சுலாவெசி, மேற்கில் இந்தோனேசியாவில் உள்ள கலிமந்தான், கிழக்கில் சங்கிஹி தீவுச் சங்கிலி, வடக்கில் சுலு கடல், சுலு தீவுக்கூட்டம், பிலிப்பீன் நாட்டைச் சேர்ந்த மிண்டனாவோ ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதியாகும். இந்தக் கடலின் அதிகபட்ச ஆழம் 20.300 அடி (6,200 மீ) ஆகும். இதன் பரப்பளவு கிழக்கு மேற்காக 520 மைல் (837 கி.மீ.) எனவும், வடக்கு தெற்ககாக 420 மைல் (675 கி.மீ.) எனவும், மொத்த மேற்பரப்பு 110,000 சதுர மைல்கள் (280,000 கிமீ 2) என்று கணக்கிடப்பட்டு உள்ளது. சுலாவெசி கடல் மக்கசார் நீரிணை வழியாக தென்மேற்கு பக்கத்தில் சாவகக் கடல் பகுதியில் இணைகிறது.
சுலாவெசி கடல் Celebes Sea | |
---|---|
![]() | |
அமைவிடம் | பசிபிக் பெருங்கடல் |
Basin countries | இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் |
பரப்பளவு | 2.8 மில்லியன் சதுர கிமீ |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.