சிவசைலம்
சிவசைலம் (Sivasailam) என்பது திருநெல்வேலி மாவட்டம், கடையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். சிவசைலம், கருணை ஆற்றுக் (கடனாநதி) கரையில் அமைந்துள்ளது. சிவசைலத்தின் துணை கிராமங்கள், பெத்தன்பிள்ளை குடியிருப்பு, இராமநாதபுரம், அதிரியானூர் மற்றும் புதுக்குடியிருப்பு ஆகும்.
சிவசைலம் | |
அமைவிடம் | 8°55′N 77°24′E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | ஷில்பா பிரபாகர் சதீஷ், இ. ஆ. ப. [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 95 மீட்டர்கள் (312 ft) |
குறியீடுகள்
|
புவியியல் தகவல்
கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 95 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. இக்கிராமத்தை பூவன்குறிச்சி, சம்பங்குளம், ஆழ்வார்குறிச்சி மற்றும் செட்டிகுளம் மற்றும் பெத்தன்பிள்ளை குடியிருப்பு, இராமநாதபுரம், அதிரியானூர் மற்றும் புதுக்குடியிருப்பு குக்கிராமங்கள் சூழ்கின்றன. திருநெல்வேலி நகரத்தில் இருந்து 50கி. மீ மேற்கில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.இவ்வூர் பருவ மழைத் தூறலுக்குப் பெயர் போனது. மக்கள் இதை சாரல் மழை என்றும் அழைப்பதுண்டு.[4]
கல்வெட்டு
பூவன்குறிச்சி ஏரியில் ஆண்டு 1916 போது ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அது சிவசைலம் கோயில் கல்வெட்டு எண்.519 உள்ளது. கல்வெட்டு ஆம்பூர் , ஆழ்வார்குறிச்சி, பூவன்குறிச்சி, கடயம், கிருஷ்ணாபுரம் போன்ற இடங்களில் மக்களிடம் கடவுளுக்கு வரி சேகரிக்கப்பட்டது என்று சொல்கிறது . 1916 ல் மற்றொரு கல்வெட்டு ஆம்பூரில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்வெட்டு எண் 518 ராஜா ரவிவர்மன் பற்றி சொல்கிறது. இந்த கோவிலின் இணையதளம்
போக்குவரத்து தகவல்
சிவசைலத்திற்கு அருகில் உள்ள தொடருந்து நிலையம் ஆழ்வார்குறிச்சி.
பேருந்து போக்குவரத்து
- அம்பாசமுத்திரம் - ஆம்பூர் - பூவன்குறிச்சி - சிவசைலம் (19.3 கிலோ மீட்டர்)
- அம்பாசமுத்திரம் - ஆழ்வார்குறிச்சி - செட்டிகுளம் - சிவசைலம் (20 கிலோ மீட்டர்)
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- Sivasailam Map