சிரை
சிரைகள் (Veins) அல்லது நாளங்கள் இருதயத்தை நோக்கி குருதியை எடுத்துச் செல்லும் குருதிக்குழல்கள் ஆகும். இழையங்களிலிருந்து இருதயத்திற்கு மீண்டும் உயிர்வளி அற்ற குருதியைப் பெரும்பாலான நாளங்கள் எடுத்துச் செல்கின்றன. விதிவிலக்காக நுரையீரல் சிரையும், தொப்புள் சிரையும் உயிர்வளி உற்ற குருதியை இருதயத்திற்கு எடுத்துச் செல்கிறன. சிரைகளுக்கு மாறுபாடாக, தமனிகள் இருதயத்திலிருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்கின்றன.
சிரை | |
---|---|
![]() மனித உடலில் உள்ள முதன்மையான நாளங்கள் | |
![]() மூன்று முதன்மையான அடுக்குகளைக் கொண்ட ஒரு நாளத்தின் அமைப்பு. இணைப்பிழையம் வெளி அடுக்குகாவும், மெல்லிய தசை மைய அடுக்காகவும், அகச்சீத செல்சகளுடன் வரிசையாக உள் அடுக்காகவும் நாளம் அமைந்துள்ளது. | |
விளக்கங்கள் | |
இலத்தீன் | vena |
அமைப்பு | சுற்றோட்டத் தொகுதி |
அடையாளங்காட்டிகள் | |
TA | A12.0.00.030 A12.3.00.001 |
FMA | 50723 |
உடற்கூற்றியல் |
சிரைகள் தமனிகளைவிட குறைந்த தசையுடனும், பல முறை தோலிற்கு நெருக்கமாகவும் அமைந்திருக்கும். குருதி பின்னோட்டத்தைத் தடுக்க பெரும்பாலான சிரைகளில் தடுக்கிதழ்கள் அமைந்துள்ளன.
அமைப்பு

சிரைகள் குழாய்கள் போன்று உடல் முழுவதும் அமைந்து இருதயத்திற்கு மீண்டும் குருதியை எடுத்துச்செல்கின்றன. சிரைகள் பல வழிகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- ஆழமற்ற சிரைகள் தொடர்புடைய தமனிகள் எவையுமி்ன்றி உடலின் மேற்பரப்பில் நெருக்கமாக அமைந்துள்ளன.
- ஆழமான சிரைகள் தொடர்புடைய தமனிகளுடன் உடலில் ஆழமாக அமைந்துள்ளன.
- தொடர்புகொள்ளும் சிரைகள் ஆழமான சிரைகளுடன் ஆழமற்ற சிரைகளை நேரடியாக இணைக்கினறன.
- நுரையீரல் சிரைகள் ஒரு தொகுப்புச் சிரைகளாக, நுரையீரலில் இருந்து உயிர்வளியை இருதயத்திற்கு வழங்குகின்றன.
- மண்டலச் சிரைகள் உடல் இழையங்களிலிருந்து உயிர்வளி அற்ற குருதியை வற்றி எடுத்து இருதயத்திற்கு வழங்குகின்றன.
செயற்பாடு
சிரைகள் குருதியை உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இதயத்திற்கு எடுத்துச் செல்கின்றன. உடல் குருதி ஓட்டத்தில் ஆக்சிஜனேற்றப்பட்ட குருதியானது இதயத்தின் இடது கீழறையில் இருந்து தமனிகள் வழியாக பல்வேறு உறுப்புகளுக்கும் தசைகளுக்கும் அனுப்பப் படுகிறது. அங்கு சத்துக்களும் வாயுக்களும் பரிமாறப்படுகின்றன. பின் கார்பன்-டை-ஆக்ஸைடு நிறைந்த குருதி சிரைகளின் வழியாக வலது மேலறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. குருதியானது பின் வலது கீழறைக்கும் அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் நுரையீரலுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
நுரையீரல் குருதி ஓட்டத்தில் ஆக்சிஜன் நிறைந்த குருதியை நுரையீரல் சிரைகள் இதயத்தின் இடது மேலறைக்கு கொண்டு செல்கின்றன. பின் இது இடது கீழறைக்கும் அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கும் அனுப்பப் படுகிறது. இந்த குருதி ஓட்டச் சுழற்சியானது தொடர்ந்து நடைபெறுகிறது.