தமனி
தமனிகள் குருதிக்குழல்களாக இருதயத்தில் இருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்கின்றன. பெரும்பாலான தமனிகள் உயிர்வளியுற்ற குருதியை ஏந்திச் செல்லும்போதிலும், இதற்கு விதிவிலக்காக நுரையீரல் தமனிகள், தொப்புள் தமனிகள் ஆகிய இரு தமனிகளுள்ளன. ஆற்றல் நிறைந்த தமனி குருதித் தொகுதி, புறவணுத் திரவமாக தமனி மண்டலத்தை நிரப்புகிறது.
தமனி | |
---|---|
![]() மனித உடலிலுள்ள முதன்மையான தமனிகள். | |
விளக்கங்கள் | |
இலத்தீன் | Arteria (பன்மை: arteriae) |
அடையாளங்காட்டிகள் | |
TA | A12.0.00.003 A12.2.00.001 |
FMA | 50720 |
உடற்கூற்றியல் |

சுற்றோட்டத் தொகுதி உயிர் வாழ இன்றியமையால் உள்ளது. எல்லா உயிரணுக்களுக்கு உயிர்வளியையும், ஊட்டக்கூறையும் வழங்கவதும், அதேபோன்று கார்பனீராக்சைடு, கழிவுப்பொருள்களை நீக்குவதும், காரகாடித்தன்மைச் சுட்டெணை (pH) உகந்து பராமரிப்பதும், நோய் எதிர்ப்பு அமைப்பின் புரதங்கள், உயிரணுக்களின் சுழற்சியை உகந்து பராமரிப்பதும் இதன் வழக்கமான செயல்பாடுகளின் பொறுப்பாகக் கொண்டுள்ளது. வளர்ந்த நாடுகளில், இறப்புக்கு முதன்மையான இரு காரணிகள், மாரடைப்பும் (Heart Attack) பக்கவாதமும் (Stroke) ஆகும். இவை தமனி மண்டலத்தில் மெதுவாகவும் படிப்படியாகவும் சீரழிவை ஏற்படுத்துகின்றது, இது பல்லாண்டுகளாக நீடிக்கும் ஒரு செயல்முறையாகும். (இதைப் பார்க்க: தமனிக்கூழ்மைத் தடிப்பு).
அமைப்பு

