சிரச தொலைக்காட்சி

சிரச தொலைக்காட்சி (Sirasa TV, சிரச டிவி) இலங்கையில் சிங்கள மொழியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிச் சேவையாகும். 1998, சூன் 10 இல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை மகாராஜா கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான எம் டிவி (இலங்கை), சக்தி டிவி என்பன முறையே ஆங்கில, தமிழ் சேவைகளை வழங்குகின்றன.

சிரச தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் 1998
உரிமையாளர் எம்டிவி சேனல்(MTV Channel)
கொள்கைக்குரல் மக்களின் தொலைக்காட்சி
நாடு இலங்கை
மொழி சிங்களம்
ஒளிபரப்பாகும் நாடுகள் இலங்கை
உலகம்
தலைமையகம் கொழும்பு
துணை அலைவரிசை(கள்) எம் டிவி
சக்தி டிவி
நியூஸ் பெஸ்ட்
இணையத் தொலைக்காட்சி
நேரடி ஒளிபரப்பு

நாடகங்கள், கருத்தாடல்கள் போன்ற பல்வேறு சிங்கள மொழி நிகழ்ச்சிகளுடன் இசை நடன நிகழச்சிகளையும் தயாரித்து ஒளிபரப்பி வருகின்றது. விளையாட்டு நிகழ்ச்சிகளையும் இந்திப் படங்களை சிங்கள உப தலைப்புகளுடனும் இந்தி மற்றும் தமிழ் நாடகங்களை மொழி மாற்றம் செய்தும் ஆங்கில நிகழ்ச்சிகளை சிங்கள மொழியில் மொழி மாற்றம் செய்தும் ஒளிபரப்பி வருகிறது. முக்கிய செய்திகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.