நேத்ரா

நேத்ரா (NETHRA) ஒரு இந்திய ஸ்கேட்டிங் சறுக்கு விளையாட்டு விளையாட்டு வீராங்கனை ஆவார்.

நேத்ரா
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்சூன் 13, 2014 (2014-06-13)
பிறந்த இடம்சேலம்
வசிப்பிடம்சேலம், தமிழ்நாடு, இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுசறுக்கு விளையாட்டு skating
பயிற்சியாளர்மேகலா
சாதனைகளும் பட்டங்களும்
மிக உயர்ந்த உலகத் தர வரிசைசிறுவர்,சிறுமியருக்கான 500மீட்டர்,1000மீட்டர் ஸ்கேட்டிங் போட்டிகளில் தங்கம்
 
பதக்கங்கள்
மகளிர் சறுக்கு விளையாட்டு
 இந்தியா
தங்கம்2017 தாய்லாந்து | சிறுவர்,சிறுமியருக்கான 500மீட்டர் ஸ்கேட்டிங்|சறுக்கு விளையாட்டு{{{2}}}
தங்கம்2017 தாய்லாந்து | சிறுவர்,சிறுமியருக்கான 1000மீட்டர் ஸ்கேட்டிங்|சறுக்கு விளையாட்டு{{{2}}}

பிறப்பு

நேத்ரா தமிழ்நாடு சேலம் மாவட்டத்தில் அம்மாப்பேட்டையில் பார்த்தீபன்-பிரியா தம்பதிக்கு மகளாகப் பிறந்தார்.

பயிற்சி

இரண்டரை வயதிலேயே தனது கால்களில் சக்கரத்தை மாட்டிக்கொண்ட நேத்ரா, மாஸ்டர் விசில் ஊதியதும் மின்னல் வேகத்தில் ஸ்கேட்டிங்கில் பறக்கிறார். வளைவில் சர்ரென்று திரும்பி, நம்மை நோக்கி வரும் நேத்ரா முகமெல்லாம் புன்னகை. நம் மீது மோதுவது போல வந்து சட்டென்று திரும்பிச் செல்கிறார்.

சாதனை

ஸ்கேட்டிங் பயிற்சியை ஆரம்பித்த நேத்ரா, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஸ்கேட்டிங்கில் இந்தியா சார்பில் சர்வதேச அளவில், நான்கு வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கம் வென்ற சிறுமி என்ற பெருமை நேத்ராவையே சாரும்.

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டி. தற்போது மூன்றரை வயதாகும் நேத்ரா, நான்கு முதல் ஆறு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில், 500 மீட்டர் மற்றும் 1000 மீட்டர் பிரிவுகளில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

சாதனை சிறுமி

மேற்கோள்கள்

http://www.vikatan.com/news/tamilnadu/90900-meet-the-skating-champion-nethra-who-won-two-international-medals-at-just-three-years.html%7C சாதனை கட்டுரை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.