சிட்டகாங் கோட்டம்

சிட்டகாங் கோட்டம் (Chittagong Division) (வங்காள: চট্টগ্রাম বিভাগ) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் நிர்வாகத்திற்காக எட்டு கோட்டங்கள் நிறுவப்பட்டது. அவ்வெட்டுக் கோட்டங்களில் ஒன்றே சிட்டகாங் கோட்டம் ஆகும். சிட்டகாங் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான சிட்டகாங் நகரம் ஒரு பெருநகர மாநகராட்சியாகும்.

சிட்டகாங் கோட்டம்
চট্টগ্রাম বিভাগ
வங்காளதேச கோட்டங்கள்

வங்காளதேசத்தில் சிட்டகாங் கோட்டத்தின் அமைவிடம்

சிட்டகாங் கோட்டத்தின் மாவட்டங்கள்
நாடு வங்காளதேசம்
தலைமையிடம்சிட்டகாங்
பரப்பளவு
  மொத்தம்33,771.18
மக்கள்தொகை (2011 census)
  மொத்தம்2,84,23,019
  அடர்த்தி840
நேர வலயம்வங்காளதேச சீர் நேரம் (ஒசநே+6)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுBD-B

வங்காளதேசத்தின் தூர தென்கிழக்கில் அமைந்த சிட்டகாங் கோட்டம் மற்ற கோட்டங்களை விட பரப்பளவில் பெரியதாகும். 2,84,23,019 மக்கள் தொகை கொண்ட சிட்டகாங் கோட்டத்தின் பரப்பளவு 33908.55 சதுர கிலோ மீட்டராகும்.[1] சிட்டகாங் கோட்டத்தில் உள்ள காக்ஸ் பஜார் கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

இக்கோட்டம் 11 மாவட்டங்களைக் கொண்டுள்ளது.

புவியியல்

இக்கோட்டம் மலைத்தொடர்கள், ஆறுகள், சமவெளிகள், காடுகள், கடற்கரைகள் முதலிய இயற்கை வளங்கள் கொண்டது. இக்கோட்டத்தின் அதிகபட்ச வெப்பம் 33.8 பாகை செல்சியஸ் ஆகவும்; குறைந்தபட்ச வெப்பம் 14.5 பாகை செல்சியஸ் ஆகவும்; ஆண்டு சராசரி மழைப் பொழிவு 3194 மில்லி மீட்டராகவும்; காற்றில் ஈரப்பதம் 83% ஆகவும் உள்ளது. இக்கோட்டம் 11 மாவட்டங்களைக் கொண்டுள்ளது.

கோட்ட எல்லைகள்

சிட்டகாங் கோட்டத்தின் வடகிழக்கில் சில்ஹெட் கோட்டமும், இந்தியாவின் திரிபுரா மாநிலமும், கிழக்கில் இந்தியாவின் மிசோரம் மாநிலமும், தென்கிழக்கில் மியான்மர் நாட்டின் சின் மாநிலம் மற்றும் ராக்கீன் மாநிலமும், தென்மேற்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் பரிசால் கோட்டமும், வடமேற்கில் டாக்கா கோட்டமும் எல்லைகளாக உள்ளது.

கோட்ட நிர்வாகம்

33908.55 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சிட்டகாங் கோட்டத்தில் பெரிய மாவட்டமாக ரங்கமதி மாவட்டம் 6,116.11 சதுர கிலொ மீட்டர் பரப்பளவுடனும்; சிறிய மாவட்டமாக பெனி மாவட்டம் 990.36 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடனும் உள்ளது. இக்கோட்டத்தில் சிட்டகாங் மற்றும் கொமில்லா என இரண்டு மாநகராட்சிகளும்; 59 நகராட்சி மன்றங்களும்; 112 துணை மாவட்டங்களும்; 947 கிராம ஒன்றியக் குழுக்களும்; 7561 வருவாய் கிராமங்களும்; 15,219 கிராமங்களும் கொண்டுள்ளது. மேலும் இக்கோட்டம் 59 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [2]

இக்கோட்டத்தின் வடமேற்கில் அமைந்த முதல் ஆறு மாவட்டங்களின் பரப்பளவு 37.6% ஆகும். தென்கிழக்கில் அமைந்த பிற ஐந்து மாவட்டங்களின் பரப்பளவு 62.4% ஆகும். சிட்டகாங் கோட்டத்தின் இவ்விரண்டு பகுதிகளையும் பெனி ஆறு பிரிக்கிறது.

சிட்டகாங் கோட்டத்தில் வடமேற்கில் அமைந்த கக்ராச்சாரி, ரங்கமதி மற்றும் பந்தர்பன் மாவட்டங்களை சிட்டகாங் மலைப் பிரதேசம் என முன்பு அழைக்கப்பட்டது.

பெயர்தலைமையிடம்பரப்பளவு (km²)மக்கள் தொகை
1991
மக்கள் தொகை
2001
மக்கள் தொகை
2011
பந்தர்பன்பந்தர்பன்4,479.012,30,5692,98,1203,88,335
பிரம்மன்பரியாபிரம்மன்பரியா1,881.2021,41,74523,98,25428,40,498
சந்திரபூர்சந்திரபூர்1,645.3220,32,44922,71,22924,16,018
சிட்டகாங்சிட்டகாங்5,282.9252,96,12766,12,14076,16,352
கொமில்லாகொமில்லா3,146.3040,32,66645,95,53953,87,288
காக்ஸ் பாஜார்காக்ஸ் பஜார்2,491.8514,19,26017,73,70922,89,990
பெனிபெனி990.3610,96,74512,40,38414,37,371
கக்ராச்சாரிகக்ராச்சாரி2,749.163,42,4885,25,6646,13,917
லெட்சுமிபூர்லெட்சுமிபூர்1,440.3913,12,33714,89,90117,29,188
நவகாளிநவகாளி3,685.8722,17,13425,77,24431,08,083
ரங்கமதிரங்கமதி6,116.114,01,3885,08,1825,95,979
மொத்தம்சிட்டகாங் கோட்டம்33,908.552,05,52,9082,42,90,3842,84,23,019

மக்கள் தொகையியல்

33908.55 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இக்கோட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 2,84,23,019 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 1,39,33,314 ஆகவும், பெண்கள் 1,44,89,705 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.63% ஆக உள்ளது. பாலின விகிதம் 96 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 838 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 52.7% ஆக உள்ளது. [3]இக்கோட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.

பொருளாதாரம்

இக்கோட்டம் வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்து உள்ளது. இக்கோட்டத்தில் பல ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. எனவே இங்கு நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, சணல், வாழை, எண்ணெய் வித்துக்கள், நவதானியங்கள், சோளம், உருளைக்கிழங்கு முதலியன பயிரிடப்படுகிறது. மீன் பிடித்தல், நெசவு நெய்தல் பிற முக்கியத் தொழில்கள் ஆகும். சிட்டகாங் துறைமுகம் வங்காள தேசத்தின் இரண்டாவது பெரிய துறைமுகம் ஆகும். எனவே இங்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைபெறுகிறது.

போக்குவரத்து

ஆறுகளின் நீர் வழித் தடங்கள் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு இயந்திரப் படகுகள் மற்றும் பாய்மரப் படகுகள் பயன்படுத்தப்படுகிறது.

கல்வி

வங்காளதேசத்தின் பிற கோட்டங்களைப் போன்று, இக்கோட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், சட்டம் மற்றும் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.

இதனையும் காண்க

மேற்கோளகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.