கொமில்லா மாவட்டம்

கொமில்லா மாவட்டம் (Comilla district) (வங்காள: কুমিল্লা জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். வங்கதேசத்தின் தென்கிழக்கில் அமைந்த இம்மாவட்டம், டாக்கா நகரத்திலிருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் சிட்டகாங் கோட்டத்தில் உள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் கொமில்லா நகரம் ஆகும்.

வங்காளதேசத்தில் கொமில்லா மாவட்டத்தின் அமைவிடம்

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

வங்காளதேசத்தின் தென்கிழக்கில் அமைந்த கொமில்லா மாவட்டம் 3,085 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தின் வடக்கில் பிரம்மன்பாரியா மாவட்டம் மற்றும் நாராயணன்கஞ்ச் மாவட்டம், தெற்கில் நவகாளி மாவட்டம் மற்றும் பெனி மாவட்டம், மேற்கில் இந்தியாவின் திரிபுரா மாநிலம் மற்றும் சந்த்பூர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

இம்மாவட்டத்தின் குறைபட்ச வெப்ப நிலை 34.3 பாகை செல்சியசும், அதிகபட்ச வெப்பநிலை 34.3 பாகை செல்சியசுமாக உள்ளது. ஆண்டு சராசரி மழைப் பொழி 2551 மில்லி மீட்டராக உள்ளது. இம்மாவட்டத்தில் மெக்னா ஆறு, கும்தி ஆறு மற்றும் தகாதியா ஆறுகள் பாய்கிறது.

மாவட்ட நிர்வாகம்

கொமில்லா மாவட்டம் பதினேழு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. [1] மேலும் இம்மாவட்டம் பதினெட்டு தொகுதிகள் கொண்ட ஒரு நகராட்சி மன்றமும், நூற்றி எண்பது ஊராட்சி ஒன்றியங்களையும், 3624 கிராமங்களையும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொமில்லா மாவட்ட மக்கள் தொகை 53,87,288 ஆகும்.[2]

பொருளாதாரம்

கொமில்லா மாவட்டம் வேளாண்மைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கதர் துணிகள் நெய்வதைக் குடிசைத் தொழிலாக கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

23.27°N 91.12°E / 23.27; 91.12

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.