சிங்கள விக்கிப்பீடியா
விக்கிப்பீடியாவின் சிங்கள மொழிப் பதிப்பு சிங்கள விக்கிப்பீடியா (http://si.wikipedia.org/) ஆகும். சிங்கள விக்கிப்பீடியா 2008 இல் அரும்ப தொடங்கி உள்ளது. ஜூன் 20, 2008 இல் 747 கட்டுரைகளை கொண்டிருந்தது. இந்த இலக்கம் குறிப்பிடத்தக்கது என்றாலும் பெரும்பாலானவை குறுங்கட்டுரைகளே. பல கட்டுரைகள் வகைப்படுத்தப்படவில்லை. பல ஆங்கில உள்ளடக்கங்களை கொண்டுள்ளன. இருப்பினும் 2007 ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.
![]() | |
உரலி | http://www.si.wikipedia.org/ |
---|---|
வணிக நோக்கம் | இல்லை |
தளத்தின் வகை | இணைய கலைக்களஞ்சியம் |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
கிடைக்கும் மொழி(கள்) | சிங்கள மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |

இடது புறம் சிங்களக் கூட்டெழுத்துகள் சரியாகத் தோன்றும் விதமும் வலது புறத்தில் சில உலாவிகளில் தவறாகத் தோன்றும் விதமும் காட்டப்பட்டுள்ளன.
சிங்கள ஒருங்குறியியில் கூட்டெழுத்துகள் சில உலாவிகளில் சரிவரத் தெரிவதில்லை. அது இன்னும் பரவலான பயன்பாட்டுக்கு வரவில்லை. கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில், 132ஆவது இடத்தில் இருக்கும் சிங்கள விக்கிப்பீடியாவில் ஆகஸ்ட் 9, 2012 வரை 6770 கட்டுரைகள் உள்ளன.
அடையாளச்சின்னம்
2007–2010 | 2010– |
---|
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.