சாவோ லூயிசு

சாவோ லூயிசு (São Luís, ஆங்கிலம்: Saint Louis) பிரேசிலிய மாநிலம் மாரன்யோவின் தலைநகரமும் மிகப் பெரிய நகரமும் ஆகும். இந்த நகரம்சாவோ மார்கோசு விரிகுடாவில் உள்ள சாவோ லூயிசு தீவில் அமைந்துள்ளது. நகரத்தின் மக்கள்தொகை 2008இல் 986,826 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை ஆக உள்ளது. இது பிரேசிலில் 16வது மிகப்பெரும் நகரமாக விளங்குகிறது.

சாவோ லூயிசு
நகராட்சி
சாவோ லூயிசு டொ மாரன்யோ
நகராட்சி
மேலே, இடதிலிருந்து வலதாக: சோவோ லூயிசு நகரமும் லகுனா யான்செனும்; நடுவில்: அவெனிடா கொலரெசு மோரீரா; கீழே, இட வலமாக: கடலோர நெடுஞ்சாலைக்கான நுழைவாயிலும் கடலோர நெடுஞ்சாலையின் இரவுக் காட்சியும்.

கொடி

சின்னம்

சாவோ லூயிசு அமைவிடம்
நாடு பிரேசில்
மண்டலம்வடகிழக்கு மண்டலம்
மாநிலம் மாரன்யோ
நிறுவியதுசெப்டம்பர் 8, 1612
அரசு
  நகரத்தந்தைஎடிவால்டோ ஓலந்தா ஜூனியர்
பரப்பளவு
  நகராட்சி827.141
ஏற்றம்4
மக்கள்தொகை (2010 IBGE)
  நகராட்சி10,11,943
  அடர்த்தி1,183.4
  பெருநகர்12,27,659
நேர வலயம்UTC-3 (ஒசநே-3)
அஞ்சல் குறியீடு65000-000
தொலைபேசி குறியீடு+55 98
இணையதளம்சாவோ லூயிசு, மாரன்யோ

சாவோ லூயிசு நகரத்தை பிரான்சு நிறுவியது. பிரேசிலில் தீவுகளில் அமைந்துள்ள மூன்று நகரங்களில் ஒன்றாக சாவோ லூயிசு விளங்குகிறது. இந்த நகரத்தில் இரண்டு துறைமுகங்கள் அமைந்துள்ளன: மதீரா துறைமுகம், இட்டாகுயி துறைமுகம். இவற்றின் வழியாக பிரேசிலின் அமேசானில் கிடைக்கும் இரும்புத் தாது ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குள்ள முதன்மையான தொழிலாக மாழை தொழிலகங்கள் (ஆலுமார், வேல்) இயங்குகின்றன. மாரன்யோ கூட்டரசு பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது.

இங்கு குடியேறிய முதல் ஐரோப்பியர்கள் பிரான்சியர் ஆவர். 1612இல் பிரான்சு இதனை தங்கள் குடியேற்றத்திற்கான மையமாக்க திட்டமிட்டிருந்தனர். இங்கு தங்கள் அரசர் மற்றும் அவரது புனித மூதாதையின் நினைவாக செயின்ட் லூயி என்ற கோட்டையை கட்டினர். இந்த நகரத்தை 1615இல் கைப்பற்றிய போர்த்துக்கேயர் இதற்கு சாவோ லூயிசு எனப் பெயர்மாற்றம் செய்தனர்.

சாவோ லூயிசின் மூதாதைகளின் பாலிலாப் பண்பணுப் பாரம்பரிய டி. என். ஏ. ஆய்வின்படி, 42% ஐரோப்பியர்கள், 39% உள்நாட்டு அமெரிக்கர் மற்றும் 19% ஆபிரிக்கர் ஆகும்.[1]

சாவோ லூயிசை அழைக்க உள்ளூர் பகுதிக்கான தொலைபேசிக் குறியீடு (பிரேசிலில் இது டிடிடி எனப்படுகிறது) 98 (DDD98) ஆகும்.[2]

வெளி இணைப்புகள்

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.