மாரஞ்ஞோ

மாரஞ்ஞோ (Maranhão, போர்த்துக்கேய ஒலிப்பு: [mɐɾɐˈɲɐ̃w]) என்பது பிரேசிலின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலத்துக்கு வடக்கில் அத்திலாந்திக் பெருங்கடலும், மற்ற எல்லைகளில் பியவி, டொக்காட்டின்சு, பாரா ஆகிய மாநிலங்களும் உள்ளன. வடகிழக்கு பிரேசில் வட்டார வழக்குக்கு உள்ளேயே இம்மாநில மக்களுக்குத் தனித்துவமான ஒலிப்பு முறை உண்டு. கொன்சால்வசு டயசு எழுதிய பாம் மரங்களின் நிலம் (The Land of the Palm Trees), அலூசியோ அசவேடோ எழுதிய காசா டி பென்சாவோ ஆகிய நூல்களில் மாரஞ்ஞோ பற்றிய விபரிப்புக்கள் காணப்படுகின்றன.

மாரஞ்ஞோ மாநிலம்
மாநிலம்

கொடி

சின்னம்

பிரேசிலில் மாரஞ்ஞோ மாநிலத்தின் அமைவிடம்
நாடு பிரேசில்
தலைநகரமும் மிகப்பெரிய நகரமும்சாவ் லூயிசு
அரசு
  ஆளுனர்ரோசானா சார்னே
  துணை ஆளுனர்யுவாவ் அல்பர்ட்டோ
பரப்பளவு
  மொத்தம்[.293
பரப்பளவு தரவரிசை8வது
மக்கள்தொகை (2012)[1]
  மொத்தம்6
  தரவரிசை10வது
  அடர்த்தி20
  அடர்த்தி தரவரிசை16வது
இனங்கள்Maranhense
மொ.உ.உ
  ஆண்டு2006 மதிப்பீடு
  TotalR$ 28,621,000,000 (16வது)
  Per capitaR$ 4,628 (26வது)
ம.வ.கு
  ஆண்டு2005
  வகை0.683 medium (26வது)
நேர வலயம்BRT (ஒசநே-3)
  கோடை (பசேநே)BRST (ஒசநே-2)
அஞ்சல் குறி65000-000 to 65990-000
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுBR-MA
இணையதளம்ma.gov.br

சூழல் பாதுகாப்புத் தொடர்பில் இம்மாநிலத்தின் லென்கோயிசு மணல்மேடுகள் முக்கியமானவை. யுனெஸ்கோ பாரம்பரியக் களமாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநிலத் தலைநகரமான சாவ் லூயிசும் (São Luís) ஆர்வத்துக்குரியது.

குறிப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.