அமேசான் படுகை

அமேசான் படுகை என்பது தென்னமெரிக்காவில் அமேசான் ஆறும் அதன் துணையாறுகளும் பாயும் பகுதிகளைக் குறிக்கும். இதன் பெரும்பகுதி (40%) பிரேசில் நாட்டிலும், மற்றும் பெரு முதலிய நாடுகளிலும் பரந்துள்ளது. தென்னமெரிக்காவில் உள்ள அமேசான் மழைக்காடுகள் உலகிலேயே மிகப்பரந்த மழைக்காடுகள் ஆகும். இது 8,235,430 ச.கி.மீ அடர்ந்த காடுகளைக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக இது இப்பகுதியையும் அங்கு வாழும் உயிரினங்களையும் பாதுகாத்து வந்துள்ளது.

அமேசான் படுகையின் வரைபடம்

வரலாறு

அமேசான் படுகையில் 12000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 16-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையின் போது பலநூறு இன மக்கள் இருந்தனர். எனினும் 90 சதவீதப் பழங்குடிகள் ஐரோப்பியத் தொற்றுநோய்களின் காரணமாக ஐரோப்பிய வருகையின் முதல் நூறு ஆண்டுகளுக்குள் அழிந்து விட்டனர்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, மக்கட்தொகைப் பெருக்கம், நெடுஞ்சாலைத் திட்டம் போன்றவற்றால் காடுகள் அழிக்கப்படுகின்றன.

உயிரினங்கள்

அமேசான் படுகையில் உள்ள காடுகள் மிகவும் அடர்ந்து காணப்படுகின்றன. எனவே இங்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. இவை மனிதர்கள் செல்ல முடியாத அளவுக்கு அடர்த்தியாக இருப்பதால் இங்குள்ள உயிரினங்களின் எண்ணிக்கை இன்றளவும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.