ஜவகர்லால் நேரு விருது

பன்னாட்டுப் புரிந்துணர்வுக்கான ஜவகர்லால் நேரு விருது (Jawaharlal Nehru Award for International Understanding) என்பது இந்திய அரசினால் 1965ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு பன்னாட்டு விருதாகும். மறைந்த பாரதப் பிரதமரான நேரு தன் வாழ்முழுதும் உலக அமைதிக்காகப் பாடுபட்டதைக் கௌரவிக்கும் வகையில் இவ்விருது அவர் பெயரால் நிறுவப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு மக்களிடையே அன்பு, நட்பு மற்றும் புரிதலை வளர்க்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இது இந்திய ரூபாய் 2.5 மில்லியனுக்கு பணமுடிப்பைக் கொண்டது. அன்னை தெரேசா (1969), நெல்சன் மண்டேலா (1979), எகுடி மெனுகின் (1968) போன்றோர் ஜவஹர்லால் நேரு விருது பெற்றோருள் சிலர்.

விருது பெற்றவர்கள்

வரிசை எண் ஆண்டு நபர் குறிப்பு
11965ஊ தாண்ட்ஐக்கிய நாடுகள் அவையின் நான்காவது பொதுச்செயலாளர்
21966மார்ட்டின் லூதர் கிங்(இறப்பின் பின்)
31967கான் அப்துல் கபார் கான்"எல்லை காந்தி"
41968யெகுதி மெனுஹின்வயலின் கலைஞர்
51972அன்னை தெரசா
61970கென்னத் டி கௌண்டாசாம்பியா குடியரசின் முதல் அதிபர்
71971மார்ஷல் ஜோசிப் ப்ரோஸ் டிட்டோயுகோஸ்லாவியா நாட்டு அதிபர்
81969ஆந்த்ரே மால்ரோபிரான்ஸ் ராஜதந்திரி
91973ஜூலியஸ் நையெரெதான்சானியா அதிபர்
101974ரௌல் ப்ரெபிஷ்ச்அர்ஜென்டினா நாட்டு பொருளியல் வல்லுநர்
111975யோனாஸ் சால்க்முதல் போலியோ தடுப்பூசியை கொடுத்தவர்
121976குயுசெப் டுக்கி
131977துள்சி மெகர்ஜி ஷ்ரேஸ்தா
141978நிச்சிதட்சு பூஜி
151979நெல்சன் மண்டேலாதென்னாபிரிக்க அதிபர்
161980பார்பரா வார்ட்பொருளியல் வல்லுநர்
171981ஆல்வா மீர்தல் மற்றும் கன்னர் மீர்தல்பொருளியல் வல்லுநர்
181982லியோபோல்ட் செடர் செங்கோர்செனிகல் நாட்டு அதிபர்
191983ப்ரூனோ கிரேஸ்கீ
201984இந்திரா காந்தி(இறப்பின் பின்னர்)
211985ஒலோப் பால்மே(இறப்பின் பின்னர்)சுவீடன் அதிபர்
221987ஜாவியெ பிரெ க்யுல்லார்ஐக்கிய நாடுகள் அவை பொதுசெயலாளர்
231988யாசேர் அராபத்பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர்
241989ராபர்ட் காப்ரியல் முகாபேஜிம்பாப்வே அதிபர்
251990ஹெல்முட் கோல்
261991அருணா அசப் அலி
271992மௌரிஸ் ஸ்ட்ராங்க்
281993ஔங் சான் சூ கீ
291994மகாதீர் பின் மொகம்மதுமலேசியப் பிரதமர்
301995ஹோஸ்னி முபாரக்எகிப்து பிரதமர்
312003கோ சோக் டோங்க்சிங்கப்பூர் பிரதமர்
322004(இன்னும் வழங்கப்படவில்லை) சுல்தான் கபூஸ் பின் சைய்த் அல் சைய்த்
332005வாங்காரி மாதாய்
342006லூயி இனாசியோ லூலா த சில்வா
352007ஓலாபுர் ரக்னர் கிரிம்சன்
362008
372009ஏஞ்சலா மெர்க்கெல்ஜெர்மனி வேந்தர்
  • 1986 - பரிசு வழங்கப்படவில்லை
  • 1996-2002 - பரிசு வழங்கப்படவில்லை

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.