சபேஷ் முரளி
சபேஷ் - முரளி (ஆங்கிலம்:Sabesh-Murali) ஆகிய இருவரும் இந்திய இரட்டை இசையமைப்பாளர் ஆவர். இவர்கள் பின்னணிப் பாடல்களும் பாடியுள்ளனர்.
சபேஷ்-முரளி Sabesh-Murali | |
---|---|
![]() தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் நேர்காணலின் போது சபேஷும் முரளியும் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | சென்னை, தமிழ் நாடு |
இசை வடிவங்கள் | டப்பாங் கூத்து, கானா |
தொழில்(கள்) | இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் |
இசைத்துறையில் | 2000 - தற்போது |
வரலாறு
தமிழ்நாட்டில் உள்ள, சென்னையைச் சேர்ந்த இவர்கள் இருவரும் உடன்பிறந்த இரட்டை சகோதரர்களாவார்கள். இருவரும் தமிழில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான தேவா அவர்களுக்கு உதவி இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து பொக்கிசம், மிளகா, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, கோரிப்பாளையம் போன்ற புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளனர்.[1]
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2001 | சமுத்திரம் | தமிழ் | |
2005 | குருதேவ் | தமிழ் | |
2005 | அடைக்கலம் | தமிழ் | |
2005 | தவமாய் தவமிருந்து | தமிழ் | |
2005 | சுயேட்சை எம். எல். ஏ. | தமிழ் | |
2006 | இம்சை அரசன் 23ஆம் புலிகேசி | தமிழ் | |
2007 | நிறம் | தமிழ் | |
2008 | இந்திரலோகத்தில் நா அழகப்பன் | தமிழ் | |
2009 | பொக்கிசம் | தமிழ் | |
2009 | வைகை | தமிழ் | |
2009 | மாயாண்டி குடும்பத்தார் | தமிழ் | |
2010 | மிளகா | தமிழ் | |
2010 | கோரிப்பாளையம் | தமிழ் | |
2010 | அந்தோனி யார் | தமிழ் | |
2010 | முதல் கனவு | தமிழ் | |
ஆதாரம்
- ரங்கராஜன், மாலதி (நவம்பர் 10 2006). "Choice of voice". தி இந்து. http://www.hindu.com/fr/2006/11/10/stories/2006111000220200.htm. பார்த்த நாள்: மே 14, 2014.
வெளியிணைப்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.