சந்தீப் சிங்

சந்தீப் சிங் (Sandeep Singh) (பிறப்பு: 27 பிப்ரவரி 1986) ஓர் இந்தியத் தொழில்முறை வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.இவர் இந்திய ஆடவர் தேசிய வளைதடிபந்தாட்டக் குழுவின் முன்னாள் தலைவரும் ஆவார்.[2] இவர் குழுவில் முழுபிற்காப்பளராகவும் இழுத்துப் பிடிப்பில் மூலைத் தண்டவகைச் சிறப்பு வல்லுனராகவும் விளங்குகிறார். இவர் அரியானா காவல்துறையில் இணைகண்காணிப்பாளராக உள்ளார்.[3]

சந்தீப் சிங்
தனித் தகவல்
முழு பெயர்அந்தீப் சிங் பிந்தர்
பிறப்பு27 பெப்ரவரி 1986 (1986-02-27)
சாகாபாது, குருசேத்திரம், அரியானா, இந்தியா
உயரம்1.84 m (6 ft 0 in)[1]
விளையாடுமிடம்முழுபிற்காப்பு
மூத்தவர் காலம்
ஆண்டுகள்அணிதோற்றம்(கோல்கள்)
2013மும்பை மாயக்காரர்கள்12(11)
2014–2015பஞ்சாப் வீரர்கள்(22)
2016–தற்சமயம்வரைஇராஞ்சிக் கதிர்கள்1(0)
தேசிய அணி
2004–அண்மை வரைஇந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி
Last updated on: 21 ஜனவரி 2016

இளமை

இவர் அரியானா மாநில, குருசேத்திரம் மாவட்டத்தில் சாகாபாது பேரூரில் குர்சரண் சிங் சைனிக்கும் தல்ஜித் கௌர் சைனிக்கும் பிறந்தார். இவரது அண்ணன் பிக்ரமஜீத் ச்ங்கும் ஓர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். பின்னவர் இந்திய எண்ணெய் நிறுவனம் சார்பில் விளையாடுகிறார்.[4][5]

சாதனைகள்

  • இவர் 2009 சுல்தான் அசுலான் சா கோப்பைப் போட்டியில் அப்போட்டியின் சிறந்தவராக அனைத்து இலக்குகளையும் வென்றார்.
  • இவர் 16 இலக்குகள் எடுத்து இலண்டனில் நடந்த 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத் தேர்வு பெற்ற முன்னணி ஆடவர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார்.[6]

விருதுகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.