சத்யம் (திரைப்படம்)
சத்யம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. கண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கமல் ஹாசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
சத்யம் | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். ஏ. கண்ணன் |
தயாரிப்பு | சித்தூர் பி. என். சண்முகம் எஸ். ஏ. கண்ணன் (ஸ்ரீ ஷண்முகமணி பிலிம்ஸ்) |
கதை | வியட்நாம் வீடு சுந்தரம் |
திரைக்கதை | எஸ். ஏ. கண்ணன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கமல் ஹாசன் தேவிகா ஜெயசித்ரா மஞ்சுளா |
ஒளிப்பதிவு | கே. எஸ். பிரசாத் |
படத்தொகுப்பு | ஆர். தேவராஜன் |
வெளியீடு | மே 6, 1976 |
நீளம் | 4341 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சிவாஜி கணேசன் - தர்மலிங்கம், ஊர் நாட்டாமை.
- தேவிகா - சிவகாமி, தர்மலிங்கத்தின் மனைவி.
- கமல் ஹாசன் - குமரன், தர்மலிங்கத்தின் இளைய சகோதரன்.
- மஞ்சுளா - கௌரி, குமரனின் மனைவி.
- ஜெயசித்ரா - வாணி, குமரனின் முன்னாள் காதலி.
- எம். என். நம்பியார் - சொக்கநாதன், ஊர் பண்ணையார் மற்றும் கௌரியின் தாய்மாமன்.
- வி. கே. ராமசாமி - வள்ளிநாயகம், பண்ணையாரின் குடும்ப வக்கீல்.
- நாகேஷ் - பண்ணையாரின் வேலையாள்.
- மேஜர் சுந்தரராஜன் - காவல்துறை ஆய்வாளர்
- எஸ். வி. சுப்பையா
- டைப்பிஸ்ட் கோபு
- நீலு
- ஹாலம்
பாடல்கள்
கே. வி. மகாதேவன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. கவிஞர் கண்ணதாசன் அவர்களால் பாடல் வரிகள் எழுதப்பட்டது.
- "கல்யாண கோவிலில்" – எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- "அழகான கொடி" – எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- "கல்யாண கோவிலில் (சோகம்)" – பி. சுசீலா
- "போட்டேனெ ஒரு" – டி. எம். சௌந்தரராஜன்
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.