சங்கம் மருவிய காலப் புலவர்களின் பட்டியல்

சங்க காலப் புலவர்கள் 473 பேர். சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு இவற்றில் 17 நூல்களைப் பாடிய 17 புலவர்கள் 17 பேர். நாலடியார் நூல் சமண முனிவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு. இவர்களில் கபிலர் என்னும் புலவர் சங்க காலப் புலவர் பட்டியலிலும் உள்ளார். இவர்கள் வெவ்வேறு புலவர்கள் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்வதற்காகவே இந்தப் பட்டியல் இங்குத் தரப்படுகிறது.[1]

புலவர் பெயர்கள் அகரவரிசைப் படுத்தப்பட்டு அவரால் இயற்றப்பட்ட நூலின் பெயருடன் இங்குத் தரப்பட்டுள்ளன

  1. கண்ணங்கூத்தனார், மதுரைகார் நாற்பது
  2. கண்ணன் சேந்தனார்திணைமொழி ஐம்பது
  3. கணிமேதாவியார்திணைமாலை நூற்றைம்பது
  4. கணிமேதையார்ஏலாதி
  5. கபிலர்இன்னா நாற்பது
  6. காரியாசான்சிறுபஞ்சமூலம்
  7. கூடலூர் கிழார்முதுமொழிக்காஞ்சி
  8. சமணமுனிவர்கள்நாலடியார்
  9. திருவள்ளுவர்திருக்குறள்
  10. நல்லாதனார்திரிகடுகம்
  11. புல்லங்காடனார், மாறோக்கத்து முள்ளிநாட்டுக் காவிதியார் மகனார் – கைந்நிலை
  12. பூதஞ்சேந்தனார்இனியவை நாற்பது
  13. பொய்கையார்களவழி நாற்பது
  14. மாறன் பொறையனார்ஐந்திணை ஐம்பது
  15. முள்ளியார், பெருவாயில் – ஆசாரக்கோவை
  16. முன்றுறையரையனார்பழமொழி
  17. மூவாதியார்ஐந்திணை எழுபது
  18. விளம்பிநாகனார்நான்மணிக்கடிகை

மேற்கோள்

  1. பதினெண்கீழ்க்கணக்கு, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை 1 வெளியீடு, 1, 1970, பதிப்புரை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.