கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது
கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (Goldman Environmental Prize) என்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள முக்கிய நகரமான சான் பிரான்சிஸ்கோவைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்படும் ஒரு சூழலியல்அமைப்பு ஆகும். ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பாவின் தீவுப்பகுதி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா என உலகில் 6 முக்கிய பகுதிகளில் கிளைகளைக் கொண்டு செயல்பட்டுவருகிறது. இவ்விருதைப் பெறும் ஒவ்வொருவருக்கும் பாராட்டுப் பத்திரம் மட்டுமின்றி 1,75,000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படுகிறது.[1] இந்த விருது 1990 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 2013 ஆண்டுவரை 79 நாடுகளைச் சேர்ந்த 157 நபர்களுக்கு 15.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. பச்சை நோபல் என்று அழைக்கும் இப்பரிசை உலகச் சுற்றுச்சூழல் அமைப்பு வழங்குகிறது. 2015 ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதினைக் ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பெர்த்தா காசிரீஸ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.[2][3]
மேற்கோள்கள்
- Moore, Teresa (February 19, 1996). "Rhoda Haas Goldman, Philanthropist, Dies at 71". San Francisco Chronicle. http://articles.sfgate.com/1996-02-19/news/17768969_1_dianne-feinstein-s-committee-levi-strauss-rhoda-haas-goldman.
- "2009 Goldman Environmental Prize Winners Beat 'Insurmountable' Odds". Environment News Service. April 20, 2009. http://www.ens-newswire.com/ens/apr2009/2009-04-20-02.asp.